Coimbatore : பகவத் கீதை தியான ஸ்லோகங்கள்.. அழகாக கூறி அசத்தும் 7 வயது சிறுவன் - படைக்கப்பட்ட உலக சாதனை!

Coimbatore : பகவத் கீதை தியான ஸ்லோகங்கள்.. அழகாக கூறி அசத்தும் 7 வயது சிறுவன் - படைக்கப்பட்ட உலக சாதனை!

Ansgar R |  
Published : May 14, 2024, 11:20 PM IST

Asian World Record : கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன், ஆன்மீக வாசகங்களை கூறி ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தியுள்ளார். அச்சிறுவன் குறித்து இந்த பதிவில் காணலாம்.

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த மணிகண்டன், நீலம் தம்பதியரின் மகன் தான் 7 வயது நிரம்பிய திரிசூல வேந்தன். 4ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே பஞ்சாங்கம் படிப்பது, சிவ புராணம் பாடுவது, அனுமன் சாலிஷா என ஆன்மீக வாசகங்களை கூறுவதில் ஆற்றல் பெற்றவராக இருந்து வந்துள்ளார். 

இந்நிலையில் இவரது வீட்டின் அருகே உள்ள ராதா என்பவர், வேந்தன் பகவத் கீதாயை ஆர்வமுடன் படிப்பதை கண்டு, பகவத் கீதையின் சமஸ்கிருத தியான ஸ்லோகங்களை கூறி பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் சிறுவன் ஒன்பது அத்தியாங்கள் கொண்ட கீதா தியானா ஸ்லோகங்களை அச்சு பிசகாமல் தெளிவாக கூற துவங்கியுள்ளார்.

சிறுவன் திரிசூல வேந்தனுக்கு முறையாக அளித்த பயிற்சியால், சமஸ்கிருத மொழியில் கீதா தியானா ஸ்லோகங்களை 2 நிமிடம் 41 விநாடிகளில் கூறி அசத்தியுள்ளார். இவரது இந்த சாதனை ஆசிய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இது குறித்து சிறுவன் கூறுகையில், ஏற்கனவே பஞ்சாங்கத்தை தாம் வேகமாக படித்துள்ளதாகவும், அதன் தொடர்ச்சியாக கீதா தியானா ஸ்லோகங்களை கூறுவதில் பயிற்சி பெற்றதால் இந்த சாதனையை செய்ய முடிந்த்தாக கூறினார். 

02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
Read more