வெறும் அரிசி மாவுல எத்தனை நாளுக்கு தோசை சுடுவீங்க?! இந்த தோசையை சுடுங்க.. 'ஊட்டச்சத்து' எக்கச்சக்கம்!!  

By Kalai Selvi  |  First Published May 16, 2024, 7:30 AM IST

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த உணவு எளிதான செய்முறையும், குறைந்த செலவையும் கொண்டிருந்தால் அதைவிட வேறென்ன வேண்டும். ஈஸியாக செய்யும் புரோட்டீன் சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை குறித்து இங்கு காணலாம். 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சத்தான உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த உணவு எளிதான செய்முறையும், குறைந்த செலவையும் கொண்டிருந்தால் அதைவிட வேறென்ன வேண்டும். ஈஸியாக செய்யும் புரோட்டீன் சத்து நிறைந்த பாசிப்பருப்பு தோசை குறித்து இங்கு காணலாம். 

இல்லத்தரசிகள் எப்போதும் உளுந்தும், அரிசியும் அரைத்து மாவு தயார் செய்து இட்லி, தோசை செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் பாசிப் பருப்பு தோசை அதைவிட சத்தானது, அதை எப்படி செய்வது என பார்த்துவிடலாமா? வாங்க தெரிந்துகொள்ளலாம். 

Latest Videos

undefined

பாசிப்பருப்பு தோசைக்கு தேவையான பொருட்கள் :

பாசிப்பருப்பு - 1 கப் 
பச்சரிசி - 1/4 கப்
தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 3 
சின்ன வெங்காயம் - 10

பெருங்காயம் - 1 சிட்டிகை

இதையும் படிங்க: உங்க வீட்ல முட்டையும் கோதுமை மாவும் இருக்கா..? ருசியான சுவையில் டிபன் ரெடி.. ரெசிபி இதோ!

பாசிப்பருப்பு தோசை செய்யும் முறை:

முதலில் அரிசியையும் பருப்பை நன்றாக கழுவி எடுத்து அதை 2 மணி நேரம் ஊறவையுங்கள். பின்னர் வெங்காயத்தைத் தோல் நீக்கி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஊறவைத்த அரிசி, பருப்பு ஆகியவற்றுடன் மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவை சேர்த்து அரையுங்கள். பதமாக நீங்கள் அரைத்த மாவுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் ஆகியவை சேர்த்து  கலக்கி கொள்ளவும். 

அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் தயார் செய்த மாவை தோசையாக ஊற்றிவிடுங்கள். தோசையை சுற்றி கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போடுங்கள். நன்கு வேகவிடுங்கள். மணக்க! மணக்க! பாசிப்பருப்பு தோசை ரெடி. கூடவே தொட்டுக்க கொஞ்சம் புதினா துவையல், தக்காளி சட்னி வைத்தால், அதன் சுவை சூப்பராக இருக்கும். தேங்காய் சட்னிக்கு 'நோ'. 

இதையும் படிங்க:  ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் பனீர் மசாலா தோசை..! ரெசிபி இதோ..!

பாசிப்பருப்பு தோசை பயன்கள்: 
இது உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு நல்ல காலைவுணவு. புரதச்சத்து, நார்ச்சத்து நிறைந்தது.  இந்த தோசையை குழந்தைகள் உண்பதால் அவர்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!