ஹோட்டல் ஸ்டைலில் அட்டகாசமான சுவையில் பனீர் மசாலா தோசை..! ரெசிபி இதோ..!

பனீர் மசாலா தோசை எப்படி செய்வது..? அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
 

healthy breakfast recipes paneer masala dosa recipe in tamil mks

பொதுவாகவே, நம்முடைய வீடுகளில் காலை இரவு உணவுகளில் இட்லி அல்லது தோசை தான் இருக்கும். ஆனால், பலர் இட்லியை விட தோசையை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். சொல்லபோனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி சாப்பிடுவது தோசை தான். 

அந்த காலத்தில் தோசை என்றால் அரிசி மாவு தோசை மட்டும் தான். ஆனால், இப்போது, தோசைகளில் பல வகைகள் உள்ளது. உதாரணமாக, கேரட் தோசை, கார தோசை, மசாலா தோசை, வெஜிடபிள் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, நெய் தோசை இப்படி சொல்லி கொண்டே போகலாம். அந்த அளவிற்கு இதன் லிஸ்ட் பெருசு. அதனால் தான் பலர் மத்தியில் தோசைக்கு மவுசு அதிகம்.

இன்று காலை உங்கள் வீட்டில் தோசை செய்கிறீர்கள் என்றால், எப்போதும் போல தோசை செய்யாமல் ஒரு வித்தியாசமான முறையில் சுவையான தோசை செய்து கொடுங்கள். என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்களுக்காக ஒரு சூப்பரான யோசனை கொண்டு வந்துள்ளோம். அது வேற ஏதும் இல்லைங்க 'பன்னீர் மசாலா தோசை' தான். 

இந்த தோசை ஒன்று மட்டும் சாப்பிட்டால் போதும் வயிறு நிரம்பி விடும். இது மிகவும் ஆரோக்கியமானது. இந்த தோசையை இன்று உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுங்க அசந்து போவாங்க. சரி வாங்க..இப்போது பனீர் மசாலா தோசை எப்படி செய்வது..? அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தோசைமாவு - தேவையான அளவு
பன்னீர் - 2 கப் (துருவியது)
குடை மிளகாய் - 1(பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வெண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
உப்பு, நெய் - தேவையான அளவு

இதையும் படிங்க: அட்டகாசமான சுவையில் மொறு மொறு கார தோசை.. ரெசிபி இதோ..!

செய்முறை:
பனீர் மசாலா தோசை செய்ய முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்க்கவும். பட்டர் உருகியதும் இப்போது அதில், பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து அதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்க்கவும் தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்க வேண்டும். பிறகு அதில், துருவிய பன்னீர், தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா தோசை செய்வதற்கான மசாலா தயாராகிவிட்டது.

இதையும் படிங்க: இந்த மாதிரி ஒரு தோசையை நீங்க சாப்பிடிருக்க வாய்ப்பே இல்ல.. கண்டிப்பா ஒரு முறை ட்ரை பண்ணுங்க!

இப்போது தோசை சுட தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். கல் சூடானதும் அதில் எண்ணெய் விட்டு தோசை மாவை அதில் ஊற்றி, அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விடவும். இப்போது, தோசையின் மேல் தயாரித்து வைத்த பன்னீர் மசாலாவை சேர்க்கவும். மேலும், அதன் மேல் சிறிது வெண்ணெய் வைக்கலாம். தோசை வெந்ததும் மீண்டும் இதே முறையில் செய்யுங்கள். அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் பன்னீர் மசாலா தோசை ரெடி!! இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்...

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios