- Home
- Gallery
- பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனா! பாஜகவில் இணைந்து விட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்!
பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனா! பாஜகவில் இணைந்து விட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்!
நடிகை மீனா இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை பிரதமர் மோடியுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் தனது இல்லத்தில் கடந்த ஆண்டு பொங்கல் விழா நடத்தியதை தொடர்ந்து இந்த ஆண்டும், பொங்கல் விழா டெல்லியில் மிக சிறப்பாக நடந்தது.

நேற்று டெல்லியில் நடந்த பொங்கல் விழாவில், பிரதமர் மோடி தமிழர்களின் கலாச்சார உடையான வேட்டி, சட்டை அணிந்து, கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன், நடிகை மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதே நேரம் பாஜக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினரான பாஜகவின் முக்கிய பிரமுகர் நடிகை குஷ்பு இந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ளவில்லை. மேலும் மீனா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதால்... அவர் பாஜக கட்சியில் இணைந்து விட்டாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் நடிகை மீனாவுக்கு இந்த நிகழ்ச்சியி கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதே போல் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன. இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.