TN 10th Exam Result 2024 : தமிழகத்தில் இன்று மே 10ம் தேதி 10ம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகள் காலை 9:30 மணியளவில் வெளியாக உள்ளது.
நடந்து முடிந்த 12 ஆம் வகுப்பு களுக்கான தேர்வு முடிவுகள் இந்த வார தொடக்கத்தில் மே மாதம் 6ம் தேதி வெளியானது. அதனைத் தொடர்ந்து இன்று மே 10ம் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகள் காலை சுமை 9.30 மணி அளவில் வெளியாகவுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் அரசு முழு வீச்சில் செய்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 9.10 லட்சம் மாணவர்கள் இந்த பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதியுள்ளனர். அதில் சுமார் 4.57 லட்சம் மாணவர்களும், 4.52 லட்சம் மாணவிகளும் தேர்வினை எழுதியுள்ளனர். ஒரு மூன்றாம் பாலினத்தவரும் இந்த தேர்வு எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தொடங்கிய இந்த பத்தாம் வகுப்பு தேர்வுகள், கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரை நடைபெற்றது.
அதன் பிறகு பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வுகளுக்கான விடைத்தாள்களை திருத்தும் பணி மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ள. இந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா, தேர்வு முடிவுகளை எப்படி பார்க்கலாம் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியேற்றுகிறார்.
அதன்படி இன்று மே 10ஆம் தேதி காலை 9.30 மணியளவில் சென்னையில் உள்ள தேர்வு துறை இயக்குனர் அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும், அதை மாணவியர்கள் www.tnresults-nic-in, www.dge.tn.gov.in மற்றும் results.digilocker.gov.in ஆகிய மூன்று இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் மாணவர்களுடைய கைபேசி எண்ணுக்கும் நேரடியாகவே தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக வந்து சேரும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.
கோடை வெயிலில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தமிழக அரசு அறிவுறுத்தல்!