My V3 Ads : முதலீட்டாளர்களே உஷார்.. எச்சரிக்கை விடுத்த கோவை மாநகர போலீசார்.. என்ன அது? - முழு விவரம் இதோ!

By Ansgar R  |  First Published May 9, 2024, 11:14 PM IST

My V3 Ads : My V3 Ads என்ற நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் இவ்வாண்டு ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தது அனைவரும் அறிந்ததே.


இந்நிலையில் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஒரு பதிவை கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது அதில்..  My V3 Ads என்ற அந்த நிறுவனத்தின் சக்தி ஆனந்தன் மற்றும் அதன் பிற உரிமையாளர்கள் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் Prize chits and money circulation schemes banning act 1978, the banning of unregulated deposit schemes at 2019ல் உள்ள சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சக்தி ஆனந்தன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

"மேலும் இவ்வழக்கின் தன்மை காரணமாக தற்பொழுது வழக்கானது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, அத்துறையின் விசாரணையின் கீழ் உள்ளது. மேற்படி அந்த நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்களை சப்ளை செய்த சித்துவா ஹெர்பல் & ஃபுட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்த விஜயராகவ் என்பவர் மீது போலியான முனைவர் படிப்பு சான்றுடன், மேற்படி பொருட்களை தயாரிக்க உரிமம் பெற்றுள்ளதாக மோசடியில் ஈடுபட்டவர் மீது கோவை மாநகர குற்ற பிரிவில் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வழக்கு தொடரப்பட்டு அவர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

Latest Videos

undefined

பேட்ஜ் ஓர்க்கா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா? மதுரையில் கயிறு கட்டி இயக்கப்பட்ட அரசு பேருந்து

My V3 Ads என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் அதற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்களை அனுப்பிய நிறுவனத்தின் உரிமையாளர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட சட்டப்படியான நடவடிக்கைகள் தவிர My V3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காகவும், மற்றும் அந்நிறுவனத்தின் சார்பாக தனிநபரை மிரட்டியதாக வந்த புகார் மீதும், அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் மீது கோவை மாநகரில் உள்ள C2 பந்தயச் சாலை, E1 சிங்காநல்லூர் மற்றும் இ2 பீளமேடு ஆகிய காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. 

மேலே கூறப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் புலன் விசாரணையில் உள்ளன, இந்த சமயத்தில் மேலே குறிப்பிட்டுள்ள குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலும் அல்லது அந்நிறுவனத்தின் கிளை நிறுவனம் என்ற பெயரிலும் தனி நபர்கள் முதலீடு செய்வதாகவும், அத்தகைய முதலீட்டை வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்வரும் மேற்படி நிறுவனம் சட்ட விரோதமாக வசூலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்களாக பரவுவதாக தெரிய நேரிடுகிறது. 

பொதுமக்கள் அனைவரும் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மேலே கூறியுள்ள நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால் அது சட்டவிரோதமானது மற்றும் போலியானது என்பதையும் தெரிவித்துக் கொள்ளவேண்டும். இதுபோன்ற செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கோவை மாநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் பொதுமக்கள் தங்களது கடும் உழைப்பில் ஈட்டிய பணத்தை தங்களது சேமிப்பை எதிர்காலதிட்டம் கருதி ஏதேனும் நிறுவனத்தில் அல்லது தொழிலில் முதலீடு செய்யும் நோக்கில் இருக்கும் பட்சத்தில் அத்தகைய தொழில் அல்லது நிறுவனங்கள் குறித்து விவரங்களை மத்திய, மாநில அரசுகளில் சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் மற்றும் வழிகாட்டுதல்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு செயல்படுமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்கிறோம்.

ஏமாற்றும் வகையில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத அரசு அறிவுறுத்தியுள்ள நெறிமுறைகளுக்கு மாறாக, சட்டத்திற்கு புறம்பாக, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து மோசடியில் ஈடுபடும் நபர்கள் குறித்து உள்ளூர் காவல்துறையினர் சார்பாக வெளியிட்டுள்ள எச்சரிக்கைகள் அல்லது அறிவுரைகளை நன்கு தெரிந்து கொண்டு கவனமாக செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலை வேண்டுமா? லிங்கை கிளிக் செய்யுங்கள் என கூறி இளைஞரிடம் ரூ.5 லட்சத்தை உருவிய கும்பல்

click me!