மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து திருமங்கலம் செல்லும் பேருந்தின் பழுதடைந்த பாகங்களை கயரால் கட்டி வைத்து ஆபத்தான முறையில் இயக்கப்படும் அரசு பேருந்து.
தமிழகத்தில் பொதுமக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகம் தொடர்ந்து நட்டத்தில் இயங்கி வருகிறது. அதிலும் மகளிருக்கு இலவசப் பயணம் என்ற அறிவிப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க முடியாமல் அரசும் திணறி வருகிறது. இதன் விளைவாக தமிழகம் முழுவதும் பல அரசுப் பேருந்துகள் பழுதடைந்த நிலையிலேயே இயக்கப்பட்டு வருகின்றன.
நெல்லையில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக காவல்துறை அடக்குமுறை? தடியடியில் பலர் காயம்
மேலும் ஓட்டுநர், நடத்துநர் பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் தற்காலிக பணியாளர்களை அவ்வபோது பணியில் சேர்த்து ஆள் பற்றாக்குறையை சமாளித்து வருகின்றனர். நிதிச்சுமை அதிகரிக்கவே அண்மை காலமாக பல அரசுப் பேருந்துகளில் செல்லும் வழியிலேயே பேருந்து பழுதடைதல், படிக்கட்டுகள் உடைந்து விழுவது, மேற்கூரை பறப்பது என சில வினோத செயல்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர், புறநகர் பகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து அதிகமாக பள்ளி, கல்லூரி மாணவர்களே சென்று வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து திருமங்கலம், கல்லுப்பட்டி செல்லும் அரசு பேருந்து பாகங்கள் பழுதடைந்த நிலையில் அதனை சரி செய்யாமல் இருபுறமும் ஜன்னலில் கயிறு கட்டி வைத்து ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது.
இதுபோன்று பல பேருந்துகள் ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில் இயக்கப்பட்டு வருவதால் இதனை முறையாக சரி செய்து இயக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.