சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து.. இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட சடலம் - பலி எண்ணிக்கை 10ஆக உயர்வு!
சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 8 பேர் தீக்கயங்களுடனும் மீட்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் திருத்தங்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் 50 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. 200 க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல் பட்டாசு தொழிலாளர்கள் பணியை துவங்கினர். பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தானது அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி மொத்தம் ஏழுக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகின.
விளையாட்டில் மோதல்; ஸ்டம்பால் தாக்கிய சிறுவன், சுருண்டு விழுந்த வாலிபர் -திருவாரூரில் பரபரப்பு
இந்த விபத்தில் 6 பெண் தொழிலாளர்கள், 4 ஆண் தொழிலாளா்கள் என உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. மேலும் 9 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்து ஏற்பட்டு சில மணி நேரத்திற்கு பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருந்ததால் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த விபத்தில் சுமார் 7 அறைகள் தரைமட்டமாகின.