சிறையில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் அடைத்து சித்ரவதை; நீதிபதி முன்பாக சவுக்கு சங்கர் முறையீடு

By Velmurugan sFirst Published May 8, 2024, 7:43 PM IST
Highlights

கோவை சிறையில் தன்னை 10 காவலர்கள் தாக்கியதாக பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நீதிபதி முன்பாக முறையிட்டார்.

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், காவல்துறை அதிகாரிகள், பெண் போலீஸார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கடந்த 4ஆம் தேதி தேனி மாவட்டத்தில் கோவை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அந்த கைது நடவடிக்கையின் போது போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

பெண்களை இழிவாக பேசியதால் சவுக்கு சங்கர் கைதா? அப்போது பாதி திமுக. காரர்கள் சிறையில் தான் இருக்க வேண்டும் - வானதி சீனிவாசன் விமர்சனம்

அந்த கைது நடவடிக்கையின் போது கஞ்சா வைத்திருந்ததாக சங்கர் உள்ளிட்ட மூவர் மீது தேனி பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் வழக்குப்பதிந்தனர். அந்த வழக்கில் சவுக்குசங்கர் நேற்று (மே 7) மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக கோவையிலிருந்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

வீட்டில் ஒருவராக வளர்ந்த பசுவுக்கு வளைகாப்பு நடத்திய விவசாய தம்பதி; தென்காசியில் நெகிழ்ச்சி

அப்போது கோவை சிறையில் தனக்கு பாதுகாப்பில்லை. என்னை 10 காவலர்கள் சேர்ந்து தாக்கினார்கள். என்னை மதுரை அல்லது தஞ்சை சிறைக்கு மாற்றம் செய்யுங்கள். மேலும் தன்னை மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அறையில் அடைத்து வைத்துள்ளதாக முறையிட்டார். மே 22 வரை 15 நாட்கள் சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, கோவை சிறைக்கு சவுக்கு சங்கர் அழைத்து செல்லப்பட்டார்.

click me!