வீட்டில் ஒருவராக வளர்ந்த பசுவுக்கு வளைகாப்பு நடத்திய விவசாய தம்பதி; தென்காசியில் நெகிழ்ச்சி
தென்காசி மாவட்டத்தில் வீட்டில் ஒருவராக வளர்ந்த பசு மாட்டிற்கு விவசாய தம்பதியர் வளைகாப்பு நடத்தி அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள பூவன்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ் - பால சரஸ்வதி தம்பதியினர். கனகராஜ் கடையம் யூனியன் முன்னாள் கவுன்சிலராக இருந்த நிலையில், தற்போது முழு நேர விவசாய பணியாற்றி பல ஆண்டுகளாக காளை, பசு மாடுகளை அவரது வீட்டில் வளர்த்து வருகிறார்.
இதில் அவர் வளர்த்து வரும் ஒரு பசுமாடு இவரது வீட்டிலேயே கன்று குட்டியில் இருந்து வளர்ந்து வருகிறது. தற்போது முதல் சினையாகி பிரசவத்திற்கு தயாராக இருந்துள்ளது. இந்த பசு மாட்டிற்கு விவசாய தம்பதி வளைகாப்பு நடத்தி அசத்தினர். அதாவது கொம்பில் வளையல் அணிவித்து, பசுவிற்கு புத்தாடை அணிவித்தும் வளைகாப்பிற்கு சொந்த பந்தங்களை அழைத்து விருந்து வைத்தும் அசத்தினர்.
கோவையில் தொழில் அதிபரிடம் ரூ.300 கோடி மோசடி; 140 சவரன் நகை, ரூ.100 கோடி ஆவணங்கள் பறிமுதல்
இந்தச் சம்பவம் இப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயி கனகராஜ் கூறுகையில், எனது நீண்ட நாள் ஆசை எங்கள் வீட்டில் கன்று முதல் வளர்த்து வந்த பசுவிற்கு வளைகாப்பு நடத்த ஆசைப்பட்டேன் அதனை மகிழ்ச்சியுடன் நடத்தி விட்டேன் என்றார்.