மதுரையில் குழந்தைகளுக்கு நுங்கு வண்டி செய்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சமூக ஆர்வலர்

By Velmurugan sFirst Published May 7, 2024, 10:07 PM IST
Highlights

மாறிவரும் உலகில் பனை மரம் மற்றும் பனை பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மாணவர்களுக்க நுங்கு வண்டி செய்து கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் தேர்வுகள் முடிவு பெற்று கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை மாநகர் பகுதியான ஆழ்வார்புரம் பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்காக கோடை கால பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முடிகமில் நுங்கு வண்டி செய்து ஓட்டி பார்க்கலாம் வாங்க என அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசோக்குமார் அழைப்பு விடுத்திருந்தார்,

இதனைத் தொடர்ந்து மதுரை ஆழ்வார்புரம் பகுதி குழந்தைகளுக்கு கலாம் வழியில் நண்பர்கள் அமைப்பு மற்றும் சமூக ஆர்வலர் அசோக் குமார்  குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கூடிய விழிப்புணர்வு வழங்கிடும் விதமாக கோடைகாலத்தில் பனைமரத்தின் மூலம் நமக்கு கிடைக்கும் நுங்கு பற்றியும், அதில் கிடைக்க கூடிய வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. 

ஊரார் புடைசூழ மணமகள் கல்யாணியுடன் கரம் கோர்த்த மணமகன் கல்யாணி; மொய், விருந்து ஏற்பாடுகள் தடல்புடல்

இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, உடல் வெப்பத்தை தணிக்கக் கூடியது. வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கக்கூடியது எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் முன்னொரு காலத்தில் நம்முன்னோர்கள் நுங்கு சாப்பிட்ட பிறகு அதில் வண்டி செய்து விளையாடிய பாரம்பரியத்தினை செய்து காண்பித்து குழந்தைகளையும் நுங்கு வண்டி ஓட்ட செய்தார். 

அரியலூர் - தஞ்சை நெடுஞ்சாலையில் கோர விபத்து; சாலையோரம் நின்ற லாரியில் கார் மோதி 4 இளைஞர்கள் துடிதுடித்து பலி

குழந்தைகள் ஆர்வமுடன் நொங்கு வண்டி செய்வதை பார்வையிட்டு நுங்கு வண்டியையும் ஓட்டி மகிழ்ந்தனர். இதே போல அவர்களுக்கு காகிதத்தால் பல்வேறு பொம்மைகள் செய்தும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அதையும் குழந்தைகள் ஆர்வத்துடன் செய்து மகிழ்ந்தனர். இதுபோன்ற இயற்கை முறையிலான விளையாட்டை விளையாடுவது என்பது வேகமான உலகத்தில் அரிதாகி உள்ளது. மேலும்  குழந்தைகள் செல்போன் விளையாட்டை தவிர்த்து அவர்களுக்கு  நுங்கு வண்டி செய்து காண்பித்து அவர்களை களத்தில்  விளையாடச்செய்து பழமையை மீட்டெடுக்கும் இது போன்ற சிறிய முயற்சியாக இருக்கும் என்றார் அசோக்குமார்.

click me!