- Home
- Gallery
- Kanguva 2nd Look: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா! பொங்கலை மெர்சல் செய்த 'கங்குவா' படத்தின் செகண்ட் லுக்!
Kanguva 2nd Look: சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் சூர்யா! பொங்கலை மெர்சல் செய்த 'கங்குவா' படத்தின் செகண்ட் லுக்!
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'கங்குவா' படத்தின் இரண்டாவது லுக் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும்... கடின உழைப்பால் கோலிவுட் ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் சூர்யா.
நடிகர் என்பதை தாண்டி சிறந்த தயாரிப்பாளராகவும் அறியப்படும் சூர்யா, தொடர்ந்து ஒரே மாதிரியான கதைகளத்தில் நடிக்க விரும்பாமல், தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
பிரதமர் மோடியின் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட நடிகை மீனா! பாஜகவில் இணைந்து விட்டாரா? வைரலாகும் புகைப்படங்கள்!
அந்த வகையில் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா 6 கெட்டப்பில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 1 வருடத்திற்கு மேலாக நடந்து வரும், இந்த படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் தான் முடித்தார் சூர்யா.
இதுவரை சூர்யா நடித்து வெளியான படங்களில் இருந்து, மிக அதிகமான பட்ஜட்டி உருவாகியுள்ள இந்த படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் சூர்யா ரசிகர்களுக்கு பொங்கல் விருந்து படைக்கும் விதமாக, சூர்யாவின் 'கங்குவா' படத்தில் இருந்து செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இதில் ஏற்கனவே வெளியான சூர்யாவின் தோற்றம் இடம் பெற்றிருந்தாலும்... யாரும் எதிர்பாராத ஸ்டைலிஷ் லுக் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதில் சூர்யா ஏற்கனவே 24 படத்தில் நடித்த வில்லன் லுக் மற்றும் மாஸ் படத்தில் நடித்த அப்பா சூர்யா என இரண்டும் கலந்து ஒரு லுக்கில், சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலுடன் உள்ளார். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.