கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க முகமூடி அணியாமல் இருப்பது மிகப்பெரிய தவறு , இது அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளில் நோய் அதிக அளவில் பரவுவதற்கான முக்கிய காரணம் என்ன சீனா விஞ்ஞானி தெரிவித்துள்ளார் .  சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது இந்நிலையில் சீனாவை அடுத்து இத்தாலி ,  ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன , கொரோனா வைரசால்  அதிகம் பாதித்த நாடாக அமெரிக்கா உருமாறியுள்ளது .  இந்நிலையில் அமெரிக்காவில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் .  ஆனால் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவில் அந்த வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டு தற்போது சீனா இயல்பு நிலைக்கு  திரும்பி வருகிறது ஆனால் இந்த வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திவருகிறது , 

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தில் இயக்குனர் ஜெனரல் ஜார்ஜ் காவே ,  சீனா நெருக்கடியான காலகட்டத்திலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்துள்ளது. சீனாவில் வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது அதற்கு  காரணம் ,  தனிமைப்படுத்துவதில்  சீனா அதிக கவனம் செலுத்தியது .  இந்த நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி இல்லை ,  அதேபோல தடுப்பதற்கான வலுவான குறிப்பிட்ட தடுப்பான்கள் இல்லை எனவே ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையே உள்ள சமூக தொடர்புகளை இடைவெளிகளை அதிகரிப்பதின் மூலமே இது சாத்தியம் என்பதை புரிந்துகொண்டோம்.  அதில் கவனம் செலுத்தினோம் பொது நிகழ்ச்சிகள் பொதுக்கூட்டங்களை நிறுத்தினோம் .  அதேபோல முறையான ஊரடங்கு உத்தரவு கடைப்பிடித்தல் மூலமாக வைரசை கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தோம் .  சீனாவில் பெரும்பாலும் அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர் .  இது வைரஸ் பரவலை வெகுவாக தடுத்தது.  
தற்போது அமெரிக்காவில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மிகப் பெரிய தவறு மக்கள் முகமூடி அணிவதில்லை என்பதுதான் ,  இந்த வைரஸ் நீர்த்துளிகள் மற்றும் நெருங்கிய தொடர்புகள் மூலம் பரவுகிறது ,  

வைரஸ் பரவுவதற்கு மிக முக்கிய காரணம் நீர்த்துளிகள்தான்,  எப்போதும் நாம் ஒரு முகமூடியை அணிய வேண்டும் ஏனென்றால் நான் பேசும்போது எப்போதும் நம் வாயிலிருந்து நீர்த்துளிகள் வரும் ( எச்சில் தெறித்தல் ) இது மற்றவர்களுக்கு அதாவது எதிரில் உள்ளவர்களுக்கு பரவும் இதன்மூலம் வைரஸ் எளிமையாக மற்றவர்கள் பரவுகிறது .  ஆனால் முகமூடி அணிவதன் மூலம் நீர் துளிகளை கட்டுப்படுத்த முடியும் இதனால் வைரஸ் தொற்று ஏற்படுவது வெகுவாக தடுக்கப்படும் ஆனால் இதை அமெரிக்க ஐரோப்பிய நாட்டினர் பின்பற்றுவதில்லை என்றார் அவர்.  அதேபோல் சீனாவில் எங்கு சென்றாலும் தெர்மாமீட்டர் கொண்டு பரிசோதிக்கப்படும் அதிக காய்ச்சல் உள்ளவர்கள் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்படாமல் தடுக்கப்பட்டனர் என்றார். அதேபோல் இந்த வைரசை  சீனா வைரஸ். வுகான் வைரஸ்  என்று அமெரிக்கா சொல்வது முற்றிலும் தவறு என்ற அவர்,   இது மண்ணில் இருந்து தோன்றிய வைரஸ் இது அனைவருக்கும் பொதுவான எதிரி என்றார்.