MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உலகம்
  • பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் பல்கலை வளாகப் போராட்டம்! 900 மாணவர்கள் கைது!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் பல்கலை வளாகப் போராட்டம்! 900 மாணவர்கள் கைது!

ஏறக்குறைய 20 பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, 900க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். 

2 Min read
SG Balan
Published : Apr 30 2024, 04:32 PM IST| Updated : Apr 30 2024, 04:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
University campus protests in US

University campus protests in US

அமெரிக்காவில் உள்ள கல்லூரி வளாகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் வேகமாக பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது.

ஏறக்குறைய 20 பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி, 900க்கும் மேற்பட்டவர்களைக் கைது செய்துள்ளனர். பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஒழுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சுறுத்தும் நோட்டீஸ்களும் பல மாணவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இருப்பினும் பல பல்கலைக்கழக வளாகங்களில் போராட்டங்கள் தொடர்கின்றன.

26
Why US University students are protesting?

Why US University students are protesting?

காசாவில் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் நடவடிக்கைகளால் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள் சென்ற வார இறுதியில் தொடங்கின. போலீஸ் அடக்குமுறை மற்றும் கைதுக்கு மத்தியிலும் போராட்டங்கள் தொடர்ந்தன.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் போராட்டக்காரர்கள் ஐவி லீக் பள்ளியில் வழக்கமாக அமெரிக்கக் கொடிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாலஸ்தீனியக் கொடியை ஏற்றினர். வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில், வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நடைபெறும் மேல் தளத்தில் உள்ள பாலஸ்தீனக் கொடியையும் அவர்கள் இறக்கினர்.

36
900 Students arrested in US

900 Students arrested in US

கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த வாரம் வளாகத்திலேயே முகாம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய சார்பு போராட்டக்காரர்களுக்கு இடையே மோதல்கள் நடந்துள்ளன.

பாஸ்டனில் உள்ள வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் 100 பேர், செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் 80 பேர், அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தில் 72 பேர் மற்றும் இந்தியானா பல்கலைக்கழகத்தில் 23 பேர் உள்ளனர்.

46
Gaza Ceasefire

Gaza Ceasefire

பல்கலைக்கழக வளாகத்தில் போராடும் மாணவர்கள் இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கின்றனர். காசாவில் மீதான தாக்குதலில் லாபம் அடைய முயலும் நிறுவனங்களுடனும் நாடுகளுடனும் உறவுகளைத் துண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இந்தப் போராட்டங்கள் யூத-எதிர்ப்பு மற்றும் வெறுப்பு பேச்சுக்கு வழிவகுத்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன. இருப்பினும், கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்வதில் பல்கலைக்கழக நிர்வாகிகள் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

56
Joe Biden, Benjamin Netanyahu talks

Joe Biden, Benjamin Netanyahu talks

நாடு தழுவிய போராட்டங்கள் அமெரிக்க அதிபர் ஜோ பிடனின் கவனத்துக்கும் சென்றுள்ளன. போராட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிவுறுத்தி இருக்கிறது.

அதிபர் ஜோ பிடன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் மாணவர்கள் போராட்டம் குறித்துப் பேசினார். காசா எல்லை நகரமான ரஃபாவில் நடைபெறும் தாக்குதல் குறித்து, அமெரிக்காவின் நிலைப்பாட்டை மீண்டும்  அவர் வலியுறுத்தினார் என்று கூறப்படுகிறது.

66
University campus protests in France, Italy, UK

University campus protests in France, Italy, UK

அமெரிக்க பல்கலைக்கழக வளாகங்களில் நடைபெறும் போராட்டத்தின் எதிரொலியாக பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேலிய காசா பகுதியில் ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1,170 பேரைக் கொன்றனர். சுமார் 250 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றனர். இதனால், இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் வெடித்தது.  இஸ்ரேல் ராணுவத்தின் பதிலடித் தாக்குதலில் காசாவில் 34,000 க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved