கிழக்கு லண்டனில் உள்ள ஹைனோல்ட் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. வாள் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைவில் அங்கு வந்த காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்தனர்.
பிரிட்டனில் லண்டன் நகரில் அதிகாலையில் கையில் வாளுடன் பொதுமக்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு லண்டனில் உள்ள ஹைனோல்ட் என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. வாள் ஏந்திய நபர் ஒருவர் நடத்திய கொலைவெறி தாக்குதலில் பலர் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைவில் அங்கு வந்த காவல்துறையினர் அந்த நபரைக் கைது செய்தனர்.
அந்நாட்டு போலீசாரின் அறிக்கைகளின்படி, அந்த நபர் பொதுமக்களை தாக்கியது மட்டுமல்லாமல் இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் மருத்துவமனையில் இருந்து அடுத்த அப்டேட்டுக்காகக் காத்திருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக அமெரிக்காவில் பல்கலை வளாகப் போராட்டம்! 900 மாணவர்கள் கைது!
தாக்குதல் நடத்திய நப்ர 36 வயதானவர் என்றும் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பயங்கரவாதிகளுக்குத் தொடர்பு இருக்கிறதா என்று இதுவரை தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். தாக்குதலுக்கான நோக்கம் மற்றும் குற்றவாளியின் மனநிலை குறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
"இன்று காலை ஹைனால்ட் ஸ்டேஷனில் நடந்த சம்பவம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறேன்." என்று பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹைனால்ட் நகர போலீஸ் அதிகாரிகளின் விரைவான நடவடிக்கையை அப்பகுதி மக்கள் பாராட்டியுள்ளனர். ஆனால் இதுபோன்ற தாக்குதலுக்கு காரணத்தைக் கண்டறிந்து மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வளைகுடா நாடுகளில் மே மாதம் மீண்டும் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
