வளைகுடா நாடுகளில் மே மாதம் மீண்டும் கனமழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் தகவல்
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பெஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மே மாதத் தொடக்கத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை அறிவிப்பாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பெஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மே மாதத் தொடக்கத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை அறிவிப்பாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு துபாயில் வரலாறு காணாத மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதாக ஐக்கிய அரபு அமீரக வானிலை மையம் தெரிவித்தது. இந்நிலையில் மறுபடியும் அதே போன்ற கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, கத்தார் மற்றும் பெஹ்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் மே மாதத் தொடக்கத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
"மே 2ஆம் தேதி துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் மீண்டும் மழை பெய்யும். மே 1ஆம் தேதி பெஹ்ரைனில் பலத்த மழை பெய்யும். மே 1 அல்லது 2 ஆம் தேதி தோஹா மற்றும் ரியாத்தில் பலத்த மழை பெய்யும்" என்று தனியார் வானிலை அறிவிப்பாளர் பிரதீப் ஜான் கூறுகிறார்.
மாட்டுத் தொழுவ பட்டத்துக்காரராகத் தேர்வான சிறுவன்! மாலை போட்டு மரியாதை செய்த ஊர்மக்கள்!