பெட்ரோல், டீசல் விலை அதிரடி குறைப்பு: பாகிஸ்தான் அரசு ஹேப்பி நியூஸ்!
பெட்ரோல், டீசல் விலையை பாகிஸ்தான் அரசு அதிரடியாக குறைத்துள்ளது அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பாகிஸ்தான் அரசு, பெட்ரோல் மற்றும் ஹைஸ்பீடு டீசல் (HSD) விலையை அடுத்த பதினைந்து நாட்களுக்கு முறையே ரூ.5.45, ரூ.8.42 ஆக குறைத்துள்ளது. கடந்த பதினைந்து நாட்களாக பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைந்து வருவதால், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாறுபாடுகளால் இந்த விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.288.49 ஆகவும், ஹைஸ்பீடு டீசல் விலை ரூ.281.96 ஆகவும் உள்ளது. கடந்த பதினைந்து நாட்களுக்கு முன்பு, அந்நாட்டு அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டர் விலை முறையே ரூ.4.53 மற்றும் ரூ.8.14 உயர்த்தியது என்பது கவனிக்கத்தக்கது.
நீர்மூழ்கி எதிர்ப்பு ஸ்மார்ட் ஏவுகணை சோதனை வெற்றி!
பாக்கிஸ்தான் அரசாங்கம் ஏற்கனவே தனது மக்களிடமிருந்து பெட்ரோலியம் லெவி - சட்டத்தின் கீழ் அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட வரம்பான லிட்டர் ஒன்றுக்கு ரூ.60 என்ற அதிகபட்ச பெட்ரோல் வரியை வசூலித்து வருகிறது. இந்த வரி டீசலுக்கும் பொருந்தும்.
சர்வதேச சந்தையில் பெட்ரோலின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 3 டாலர்களும், ஹைஸ்பீடு டீசல் விலை பேரலுக்கு 5 டாலர்களும் குறைந்துள்ளதாக இதுகுறித்த தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.