பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி வந்தடைந்தார் !
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அண்ணாமலை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்றிருந்தார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தைப் பார்வையிட்டார். நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். அதிமுக எம்.பிக்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக தகவல் வெளியானது.