Trump vs Iran | அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த ஈரான் ஏவுகணை தயார்!!
டிரம்ப் அச்சுறுத்தலுக்குப் பிறகு ஈரான் ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவுக்கு உட்பட்ட நிலைகளைத் தாக்க ஈரான் பதுங்கு குழிகளை ஏவுகணை ஆயுதக் களஞ்சியமாக தயார் செய்து வருவதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, ஈரான் தனது ஏவுகணைகளை நாடு முழுவதும் உள்ள பதுங்கு குழி போன்ற இடங்களில் ஏவுவதற்கு வசதியாக தயார் நிலையில் வைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இது எந்த வகையிலான வான்வழித் தாக்குதளையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.