Asianet News TamilAsianet News Tamil

Kamal : "தொட்டு பார்.. மூச்சடங்கும் இவனை கண்டு.. தருமாறு சம்பவம் செய்த அனிரூத்.. இந்தியன் 2 முதல் சிங்கள் இதோ!

Indian 2 First Single : அனிருத் இசையில் "பாரா" என்ற முதல் சிங்கள் பாடல் இப்பொது வெளியாகியுள்ளது. பிரபல பாடலாசிரியர் பா. விஜய் இந்த பாடலை எழுதியுள்ளார்.

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய நடிப்பில் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்த திரைப்படம் வெளியாகிறது. 

அது மட்டுமில்லாமல் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இப்படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்தியன் படத்தின் இரண்டு மற்றும் மூன்றாம் பாக படபிடிப்பு பணிகள் முற்றிலும் முடிந்துள்ளது. 

இந்நிலையில் பிரபல பாடல் ஆசிரியர் பா. விஜய் வரிகளில், ராக் ஸ்டார் அனிருத் இசையில் இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான "பாரா" பாடல் தற்பொழுது வெளியாகி உள்ளது. முற்றிலும் மாறுபட்ட ஒரு இசை அனுபவத்தை அனிருத் தனது ரசிகர்களுக்கு இந்த பாடல் மூலம் கொடுத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. தற்பொழுது இந்த பாடல் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. 

Video Top Stories