Asianet News TamilAsianet News Tamil

மணல் கொள்ளையர்களால் வெட்டி கொல்லப்பட்ட VAO.. அவர் கடைசி ஆசையை நிறைவேற்றி நீதிபதியான மகன் - குவியும் வாழ்த்து!

Marshall Yesuvadian : மணல் கொள்ளையளர்களால் வெட்டி கொல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்களின் மகன் நீதிபதியாகியுள்ளார்.

VAO Lourdes Francis son marshall yesuvadian passed civil judge exam bjp leader annamalai shared his congrats ans
Author
First Published Feb 18, 2024, 4:05 PM IST | Last Updated Feb 18, 2024, 4:13 PM IST

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கிராமம் தான் கோவில்பத்து. இந்த பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் தான் லூர்து பிரான்சிஸ் சேவியர். பணியில் இருந்த போது அவருக்கு வயது 55, தனது கிராமப் பகுதியில் அவ்வப்போது நிகழ்ந்து வந்த மணல் கொள்ளை விஷயங்களை தீவிரமாக கண்காணித்து அதை தடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வந்துள்ளார் லூர்து பிரான்சிஸ். 

இந்நிலையில் மணல் கொள்ளை பிரச்சனையின் காரணமாக ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில், மணல் கொள்ளையர்கள் கும்பலால் லூர்து பிரான்சிஸ் அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது அனைவரும் அறிந்ததே. மேலும் இந்த படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராம சுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் இப்போது ஆயுள் தண்டனை கிடைத்திருக்கிறது. 

காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி!

மேலும் அவர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த சூழலில் தான் மறைந்த கிராம நிர்வாக அதிகாரி லூர்து சேவியர் அவர்களுடைய மகன் மார்ஷல் இயேசுவடியான் தனது தந்தையின் கனவை நினைவாக்க டிஎன்பிசி தேர்வுகளுக்கு ஆயத்தமாகி வந்துள்ளார். தற்போது தந்தையின் கணவை நிஜமாகியுள்ளார். 

TNPSC தேர்வுகளில் வெற்றி பெற்று தற்போது சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார் மார்ஷல் இயேசுபடியான். இதனை அடுத்து பல்வேறு தரப்பினரும் தனது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட பதிவில் அவரை வாழ்த்தியுள்ளார். 

"சகோதரர் மார்ஷல் ஏசுவடியான் அவர்கள், தனது தந்தை கொலை செய்யப்பட்ட கடினமான நேரத்திலும், அவரது கனவுகளை நனவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடினமாக உழைத்து, தனது பெரும் முயற்சியால் தேர்வில் வெற்றி பெற்று சிவில் நீதிமன்ற நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது, தந்தை மீது அவர் கொண்டுள்ள அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துவதாகவும், இளைஞர்கள் அனைவருக்கும் மாபெரும் உத்வேகமாகவும், அமைந்திருக்கிறது" என்று அவர் கூறியுள்ளார்.

மேகதாதுவில் அணை: முதல்வர் ஸ்டாலின் முறியடிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios