"ஒன் லாஸ்ட் டைம்".. தளபதி 69.. படக்குழு வெளியிட்ட டச்சிங் வீடியோ - கூடவே வெளியான அப்டேட்!

Thalapathy 69 Special Video : தளபதி விஜயின் 69வது திரைப்படத்தின் அறிவிப்பயும், ஒரு நெகிழ்ச்சியான காணொளியயும் இப்போது அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Ansgar R  | Updated: Sep 13, 2024, 5:25 PM IST

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் திரையுலகில் கோடிக்கணக்கான ரசிகர்களோடு உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். ஏற்கனவே அவருடைய "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிக மிகப் பெரிய அளவிலான வரவேற்புகளை பெற்று வரும் நிலையில், தற்போது அவருடைய 69வது மற்றும் இறுதி திரைப்படம் குறித்த அறிவிப்புகள் ஒன்றின் பின் ஒன்றாக வெளியாக தொடங்கி உள்ளன. 

பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில், அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக தமிழ் திரையுலகில் களமிறங்கும், தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே பிரபலமான KVN என்ற தயாரிப்பு நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து வழங்க உள்ளது. 

இந்த சூழலில் தளபதிக்கு பிரியா விடை கொடுக்க காத்திருக்கும் அவர்களுடைய திரையுலக ரசிகர்கள் சார்பாக, 5 நிமிடங்கள் ஓடும் ஒரு நெகிழ்ச்சியான காணொளியை அந்த தயாரிப்பு நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. மேலும் நாளை செப்டம்பர் 14ம் தேதி மாலை 5 மணிக்கு தளபதி 69 திரைப்பட குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read More...

Video Top Stories