MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • TamilNadu Weatherman: சென்னையில் மழை இருக்கு! ஆனால் குட்நியூஸ் சொன்ன கையோடு ட்விஸ்ட் வைத்த தமிழ்நாடு வெதர்மேன்

TamilNadu Weatherman: சென்னையில் மழை இருக்கு! ஆனால் குட்நியூஸ் சொன்ன கையோடு ட்விஸ்ட் வைத்த தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாத இறுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Sep 19 2024, 09:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Summer Heat

Summer Heat

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மே மாதம் திரும்பி விந்துவிட்டதோ என பொதுமக்கள் நினைக்கும் அளவுக்கு வெயிலின் கொடூரத்தாண்டம் இருந்து வருகிறது. இதனால், நேரங்களில் பொதுமக்கள் வீட்டிலே முடங்கி விடுகின்றனர். இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கத்தை நன்றாகவே உணர முடிகிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு செப்டம்பர் மாதத்தில் மதுரையில் நேற்று முன்தினம் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. பாளையங்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் 102 டிகிரி, சென்னை, ஈரோடு, கரூர், மற்றும் காரைக்கால், புதுச்சேரியில் 100 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Heavy Rain

Heavy Rain

இந்நிலையில்  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் அதிகாலை திடீரென மழை பொழுந்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்: இவ்வளவு வெயிலுக்குப் இடையில் எதிர்பார்த்தபடியே 19-ம் தேதி மழை பெய்துள்ளது. அடுத்த ஒரு வாரத்திற்கு இதுதான் ட்ரெண்ட். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டில் ஆங்காங்கே மழை பெய்யும்.

இதையும் படிங்க: School Student: பள்ளி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,500! விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது? வெளியான தகவல்!

35
Chennai Rain

Chennai Rain

இந்த மாதம் கடைசியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக நல்ல மழை பெய்யும். இன்று அதிகாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் நல்ல மழை பெய்தது.  இனி இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

இதையும் படிங்க:Tamilnadu Government School: பள்ளிகளுக்கு முக்கிய உத்தரவு! செப்டம்பர் 27ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு!

45
Tamil Nadu Weatherman

Tamil Nadu Weatherman

சேப்பாக்கம் பகுதியில் இரவு மற்றும் அதிகாலையின் தான் மழை பெய்யும் என்பதால் இந்தியா - வங்கதேசம் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இல்லை. சென்னையில் கொஞ்சம் கொஞ்சமாக நாளுக்கு நாள் வெப்பநிலை குறையும். மாத இறுதியில் வட தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். மதுரைக்கு அப்படியொரு அதிர்ஷ்டம் இல்லை.  கொளுத்தும் வெயில் தொடரும். அடுத்த 5 நாட்களில் பெரும்பாலும் இரவு அல்லது அதிகாலை நேரங்களில் மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க:  SSC Job Vacancy: 40,000 மத்திய அரசுப் பணியிடங்கள் காலி! அப்ளை செய்வது எப்படி?

55
Chennai Meteorological

Chennai Meteorological

இதனிடையே தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° -4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும்  அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Cyclone Murasu: முன்கூட்டியே கரையை கடக்கிறதா முரசு புயல்? எங்கே, எப்போது, எவ்வளவு வேகம்? முழு விவரம்
Recommended image2
SCHOOL, COLLEGE HOLIDAY: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.! அடுத்தடுத்து மழை கொட்டப்போகும் மாவட்டங்கள் எவை?
Recommended image3
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved