ஆட்சியில் பங்கு கேட்ட நிலையில் முதல்வரை சந்தித்தது ஏன்? திருமா விளக்கம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்த நிலையில், சந்திப்புக்கான காரணம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

Velmurugan s  | Published: Sep 16, 2024, 5:22 PM IST

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று திருமாவளவன் முன்னதாக பேசியிருந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இன்று திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், மது ஒழிப்பு என்பது மக்களின் பிரச்சினை. இதற்கு எதிராக வருகின்ற அக்டோபர் 2ம் தேதி விசிக நடத்த உள்ள மது ஒழிப்பு மாநாட்டில் திமுக கலந்து கொள்ள உள்ளது.

எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் கிடையாது. முதல்வரின் வெளிநாட்டு பயணத்தால் அந்நிய முதலீடுகள் வெற்றிகரமாக வந்துகொண்டு உள்ளன. இதற்காக முதல்வரிடம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டேன் என்று தெரிவித்து உள்ளார்.

Read More...

Video Top Stories