இப்படி வந்து எவ்வளவு நாள் ஆச்சு…? கொரோனாவால் கிடைத்த செம மெசேஜ்..

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று 1075 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

TN corona latest details

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று 1075 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

TN corona latest details

உலகம் முழுவதும் இன்னமும் டிசைன், டிசைனாக சுற்றி கொண்டு இருக்கும் கொரோனா தொற்று இந்தியாவையும், விட வில்லை, தமிழகத்தையும் விடவில்லை.

அதிகம் பாதிப்புகள் தினமும் பதிவாகும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகமும் இருந்தது. அதன் பின்னர் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் கொரோனா தொற்றை கட்டுக்குள் வைத்திருக்க உதவியது.

குறிப்பாக நாள்தோறும் நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை, சுகாதார பணிகள் என புயல் வேகத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அரசுக்கு பலனும், மக்களுக்கு நிம்மதியையும் தந்தன. பாதிப்புகள் குறைந்து விட்டது, ஆகையால் அலட்சியம் வேண்டாம் என்று மக்களுக்கு அரசு இயந்திரம் நாள்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் இறங்கின.

TN corona latest details

முக கவசம், தனி மனித இடைவெளி கட்டாயம் என்றும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வந்தது. தொடர் செயல்பாடுகளின் எதிரொலியாக 35000 என்ற தினசரி பாதிப்புகள் மெல்ல, மெல்ல குறைய ஆரம்பித்தன.

தமிழகத்தில் 35000 பேர் பாதிப்பு என்பது 2 ஆயிரத்துக்கும் கீழாக குறைந்தது. கடந்த சில நாட்களாக 1500க்கும் குறைவான பாதிப்புகள் கண்டறியப்பட்டன. இந் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பதிவான கொரோனா பாதிப்புகளை அறிக்கையாக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு : கடந்த 24 மணி நேரத்தில் 1075 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு என்பது 26,98,493 ஆக இருக்கிறது.

TN corona latest details

கொரோனாவில் இருந்து 1315 பேர் குணமாகி உள்ளனர். ஒட்டு மொத்தமாக 26,50,145 பேர் குணமாகி வீடு திரும்பி இருக்கின்றனர். ஒரே நாளில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

அவர்களில் அரசு மருத்துவமனைகளில் 8 பேர், தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் பலியாக இருக்கின்றனர். இன்றைய பலி எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் ஒட்டு மொத்த பலி எண்ணிக்கை 36,060 ஆக உள்ளது.

TN corona latest details

சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் இன்றைய எண்ணிக்கை 139. இதுவரை 5,54,188 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை 5,06,65,567 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. இன்று 1,21,115 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு இருக்கின்றன. இன்னமும் தமிழகத்தில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 12288 ஆகும். இதுவரை ஒட்டு மொத்தமாக 15,74,898 ஆண்களும், 11,23,557 பெண்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios