இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலை - அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!

இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது என்று சமூகநலத்துறை கீதாஜீவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். 

Tamil Nadu is among the safest states for women in India says Minister Geetha Jeevan Rya

சமூக நலம், மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பெண்களுக்கான உரிமைகளை காப்பது போலவே அவர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுது செய்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு உறுதியாக இருக்கிறது. 

பெண்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தங்களுடைய பணிகளை மேற்கொள்வதற்கான சூழல் தமிழ்நாட்டில் நிலவுதால் தான் தமிழ்நாட்டில் அதிகளவிலான பெண்கள் கல்வி கற்பவர்களாவும், வேலைக்கு செல்பவர்களாகவும் சுயமானவர்களாகவும் உள்ளனர். இந்தியாவில் உற்பத்தி துறையில் உள்ள பெண்களில் கிட்டத்தட்ட பாதிபேர் அதாவது 43% பேர் தமிழ்நாட்டில் பணியாற்றுகின்றனர். 

டாக்டர் கலைஞர் 1973-ம் ஆண்டு பெண்களை முதன்முதலில் காவல்துறையில் இணைத்தார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக திரு. மு.க ஸ்டாலின் பொறுப்பேற்ற உடன் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிதாக காவல்நிலையங்களை திறந்து வருகிறார். 

நெருங்கும் புயல் சின்னம்.! ஒருவருக்கு இத்தனை பால் பாக்கெட் மட்டுமே- ஆவின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டில் மொத்தம் 241 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், 32 ஆட்கடத்தல் தடுப்பு பிரிவுகள், 7 புலன் விசாரணை பிரிவுகள், 43 குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவுகள் மற்றும் 39 சிறப்பு இளஞ்சிறார் காவல் பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சிறார்களுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதற்கு மாநிலத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 194 சிறார் நட்பு அறைகள் மற்றும் 1542 குழந்தைகள் நல காவல் அலுவர்களும் செயல்பட்டு வருகின்றனர். 

மாநில அளவில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பொருட்டு தடுப்புப்பிரிவு ஒன்று உருவாக்கப்பட்டு, அப்பிரிவு ஒரு கூடுதல் காவல் துறை இயக்குநர் தலைமையில் இயங்கி வருகிறது. அதே போல் ‘ பிராஜக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம், ‘இமைகள் திட்டம்’ ஆகியவற்றின் மூலம் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விரைவான நீதி கிடைக்க அரசு செயலாற்றி வருகிறது.

மேலும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்கள் விரைவாக தங்களின் புகார்களை பதிவு செய்ய ‘ காவல் உதவி’ செயலி முதலமைச்சரால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. அதே போல் பெண்கள் உதவி மைய எண் 181, மற்றும் குழந்தைகளுக்கான உதவி மைய எண் 1098 ஆகியவை மிகச்சிறப்பாக செயல்பாட்டில் உள்ளன. 

இவற்றின் மூலம் பதிவு செய்யப்படும் குற்றங்கள் உடனடியாக விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுக நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை, காவல்துறை ஆகிய மூன்று துறைகளும் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் இறுதியாக 2022-ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையின் படி பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் 1 லட்சத்திற்கு 62 என்றால், தமிழ்நாட்டில் 24 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாலியல் வன்புணர்வு வழக்குகளின் தேசிய சராசரி 4.6 என்ற அளவிலும் தமிழ்நாட்டில் 0.7 என்ற அளவிலும் உள்ளது.

பொங்கல் பண்டிகை தினத்தில் தேர்வா.! இறங்கி அடித்த கட்சிகள்- பின்வாங்கிய மத்திய அரசு

பெண்களின் சமூக வாழ்வை உயர்த்துவதற்கான விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமை தொகை போன்ற நாட்டிற்கே முன்னோடியான திட்டங்களை செயல்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களை தடுப்பதை அரசின் முக்கிய நோக்கமாக கொண்டு செயலாற்றுகிறது திராவிட மாடல் அரசு. 

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எத்தகைய வன்முறையையும் இந்த அரசு சகித்துக் கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது. அதனால் தான் இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னிலையில் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios