Shaktikanta Das Hospitalised: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், 'அசிடிட்டி' காரணமாக செவ்வாய்கிழமை சென்னையில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், 'அசிடிட்டி' காரணமாக சக்திகாந்த தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், கவலைப்பட வேண்டிய நிலை இல்லை என்றும் கூறினார்.

"அவர் இப்போது நலமாக இருக்கிறார், அடுத்த 2-3 மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

அவரது உடல்நிலை மருத்துவர்களால் கண்காணிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆனால், மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.

ரூ.1,435 கோடியில் PAN 2.0 திட்டம்! இனி பழைய பான் கார்டு செல்லாதா?