02:03 PM (IST) Mar 27

மாதம் ரூ.1,000 என்பது தேவைப்படும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கிடைக்கும்

மகளிர் உரிமைத்தொகை குறித்த, வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளிவரும். அரசு அங்கீகரித்தால் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சூழல் உருவாகும். மாதம் ரூ.1,000 என்பது தேவைப்படும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் கிடைக்கும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

01:58 PM (IST) Mar 27

இபிஎப்ஓவில் 2859 காலியிடங்கள்.. 12ம் வகுப்பு போதும் - விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்

இபிஎப்ஓ (EPFO) அமைப்பு எஸ்எஸ்ஏ மற்றும் ஸ்டெனோகிராபர் தொடர்பான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மேலும் படிக்க

01:52 PM (IST) Mar 27

காட்டுமிராண்டித்தனம்! இதுதான் போலீஸ் விசாரணையா.? மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - கடுப்பான ராமதாஸ்

விசாரணை என்ற பெயரில் பல்வீர்சிங் அரங்கேற்றியுள்ள கொடுமைகள் மன்னிக்க முடியாதவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் படிக்க

12:24 PM (IST) Mar 27

தந்தையை இழந்து தவிக்கும் அஜித்... தம்பி கார்த்தி உடன் சென்று ஆறுதல் கூறிய நடிகர் சூர்யா

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் இல்லத்திற்கு சென்ற நடிகர்கள் சூர்யா, கார்த்தி, தந்தையை இழந்து வாடும் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தனர். மேலும் படிக்க

12:07 PM (IST) Mar 27

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு அறிவித்த சென்னை மேயர்!

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் 100/100 மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தலா ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இதற்காக ரூ.10 லட்சம் ஒதுதுக்கப்பட்டுள்ளது. 

11:57 AM (IST) Mar 27

நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி எம்.பிக்களும் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றம் சென்றனர்.

மேலும் படிக்க

11:55 AM (IST) Mar 27

நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்

ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி எம்.பிக்களும் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றம் சென்றனர்.

மேலும் படிக்க

11:39 AM (IST) Mar 27

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளில் ஸ்நாக்ஸ்

சென்னையில் உள்ள பள்ளிகளில் மாலை நேர வகுப்புகளில் ஸ்நாக்ஸ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மேயர் பிரியா தாக்கல் செய்த சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

10:59 AM (IST) Mar 27

சென்னை மாநகராட்சி பட்ஜெட்! ஆசிரியர்கள் ஊக்கத்தொகை அதிகரிப்பு..

சென்னை மாநகராட்சியின் 2023-24ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் ப்ரியா தாக்கல் செய்தார். அப்போதுது, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10, 12ம் வகுப்புகளில் ஊக்கத்தொகை ரூ.1500ல் இருந்து ரூ.3000ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

10:56 AM (IST) Mar 27

விடாமல் காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி.. ரூ.4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை.. திருச்சியில் மீண்டும் சோகம்..!

ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

10:42 AM (IST) Mar 27

Gold Rate Today : மீண்டும் குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.

மேலும் படிக்க

10:25 AM (IST) Mar 27

ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்ட இந்தியர்கள்.. அமெரிக்காவில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம் - ஏன்.?

அமெரிக்காவின் கலிபோர்னியா குருத்வாராவில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

10:12 AM (IST) Mar 27

தமிழகத்தில் 10 உதவி போலீஸ் கமிஷனர்கள் திடீர் இடமாற்றம்.. டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !!

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு 10 உதவி கமிஷனர்களை அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளார்.

மேலும் படிக்க

09:35 AM (IST) Mar 27

ஆன்லைன் ரம்மியால் தொடரும் சோகம்... திருச்சியில் பணத்தை இழந்த மற்றொரு நபர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

08:53 AM (IST) Mar 27

மாஸ் வீடியோ உடன்... ராம்சரண் உடனான பிரம்மாண்ட படத்தின் டைட்டிலை அறிவித்த இயக்குனர் ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நாயகனாக நடித்து வந்த படத்தை தற்காலிகமாக ஆர்.சி.15 என அழைத்து வந்தனர். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்து வருகிறார். இப்படத்தை வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராம்சரணின் பிறந்தநாளான இன்று ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஆர்.சி.15 படத்தின் டைட்டிலை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படிக்க

08:27 AM (IST) Mar 27

மாணவர்களே.!! இன்று வெளியாகிறது 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் - முழு விபரம்

10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியாகிறது.

மேலும் படிக்க

08:27 AM (IST) Mar 27

மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்..? அதுதான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தல் - கி.வீரமணி எச்சரிக்கை

 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் மோடி தலைமையில். பாஜக ஆட்சிக்கு வந்தால், அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் என திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க..

08:10 AM (IST) Mar 27

16 வயது மைனர் சிறுமி.. இளைஞனுடன் ஓட்டம் - கடைசியில் இப்படியா நடக்கும்.! தந்தை கதறல்

தகராறின் போது இளம்பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

07:49 AM (IST) Mar 27

அமைச்சரின் தீவிர ஆதரவாளர் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு..!

புதுச்சேரியில் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் பாஜக பிரமுகர் கொடூர கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும் படிக்க

07:22 AM (IST) Mar 27

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது! போற போக்கில் ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக தாக்கிய இபிஎஸ்..!

திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகிறது. அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு இருக்கக்கூடிய அரசாங்கம் நேர கட்டுப்பாடு கொண்டு வந்துவிட்டது. விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் என்று பாடுபடும் கட்சி அதிமுக தான் என இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.