Gold Rate Today : மீண்டும் குறைந்த தங்க விலை.. பொதுமக்கள் மகிழ்ச்சி - எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று குறைந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காண்போம்.
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை ஏறியும், இறங்கியும் வருகிறது. நகை வாங்குவோரிடையே தங்கத்தின் தொடர் விலையேற்றம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் சவரனுக்கு 80 குறைந்து, 44,400க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், தங்கம் கிராமுக்கு 10 குறைந்து, 5,550க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல வெள்ளி விலையை பொறுத்தவரை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து 76க்கு விற்பனையானது. 1 கிலோ வெள்ளி 76,000க்கும் விற்பனையானது. இன்றைய (மார்ச் 27) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ 44,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க..மாதம் 50 ஆயிரம் சம்பளம்.. தமிழ்நாடு காவல்துறையில் காத்திருக்கும் அருமையான வேலை - முழு விபரம்
22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,540 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 6,071 ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ. 48,488 ஆக விற்பனையாகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.76.00 ஆக விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 76,000க்கு விற்பனையாகிறது.
இதையும் படிங்க..சாட் ஜிபிடியால் வேலை இழப்பு அபாயம் ஏற்படுமா.? பதறும் இளைஞர்களுக்கு குட் நியூஸ் சொன்ன இந்திய நிறுவனம்