நாடாளுமன்றத்தில் கருப்பு சட்டை.. எல்லாமே போச்சு.!! எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து செய்த தரமான சம்பவம்
ராகுல் தகுதி நீக்கத்தை கண்டித்து டி.ஆர்.பாலு உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சி எம்.பிக்களும் கருப்பு சட்டையுடன் நாடாளுமன்றம் சென்றனர்.
மோடி சமூகத்தினரை பற்றி விமர்சித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து, எம்.பி பதவியில் இருந்து, ராகுல்காந்தி தகுதி இழப்பு செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்தது. இதைக் கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸார் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று (மார்ச் 27) தமிழக பட்ஜெட் மீதான பொது விவாதம் மூன்றாவது நாளாக நடைபெறுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்தனர்.
தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் காங்கிரஸ் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். எம்.பி பதவியிலிருந்து ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ததை கண்டித்து மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பினர். பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளும் 10ம் நாளாக முடங்கியது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மக்களவை மாலை 4 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படிங்க..அதானிக்கு 20,000 கோடி எங்கிருந்து வந்தது.? சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன் - பிரதமருக்கு ராகுல் கேள்வி
ராகுல் காந்தி தகுதி நீக்கம், ராகுலின் லண்டன் பேச்சு மற்றும் அதானி குழும விவகாரத்தால் அமளி ஏற்பட்டது. 2 நாள் விடுமுறைக்கு பின் கூடிய இரு அவைகளும் எதிர்கட்சிகளின் அமளியால் சிறிது நேரத்திலேயே முடங்கின. ராகுல் காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக தற்போது எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், திமுக, சமாஜ்வாடி, திரிணாமூல் காங்கிரஸ் என 15க்கும் மேற்பட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.
இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?