மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால்..? அதுதான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தல் - கி.வீரமணி எச்சரிக்கை

 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் மோடி தலைமையில். பாஜக ஆட்சிக்கு வந்தால், அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் என  திராவிட கழகத் தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

K  Veeramani said that if Modi comes back to power, it will be the last democratic election of the country

பாஜகவிற்கு எதிரான அணி

மத்தியில் 2014 ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்த பாஜக  3வது முறையாக மீண்டும் ஆட்சியை தக்கவைக்க  தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதே நேரத்தில் பாஜகவிற்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய எதிர்கட்சிகள் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முறை பாஜகவிற்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைவது குறித்து விவாதித்து வருகின்றன. ஆனால் யார் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வியால் கூட்டணி ஏற்படுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில், மீண்டும் மோடி மட்டும் ஆட்சிக்கு வந்தால் அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் எனகீ.வீரமணி எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில்  திராவிட கழகம் சார்பில் சமூகநீதி பாதுகாப்பு மற்றும் திராவிடமாடல் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

K  Veeramani said that if Modi comes back to power, it will be the last democratic election of the country

இது தான் கடைசி ஜனநாயக தேர்தல்

புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள ஜீவா சிலை அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சிவா, முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுக்கூட்டத்தில் பேசிய திராவிட கழகத்தலைவர் கீ.வீரமணி, ஒரே நாடு ஒரே தேர்தல் என்று சொல்லும் பாஜகவினர் நாட்டில் ஒரே ஜாதி என்று சொல்லிவிட்டால் திராவிட கழகமும் அவர்களுடன் (பாஜகவினருடன்) வருகிறோம் என்று தெரிவித்தார். நாட்டில் சுடுகாட்டில் கூட பேதம் உள்ளது என்றும் குற்றம்சாட்டினார் மேலும் வரும் 2024 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் மீண்டும் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சிக்கு வந்தால் ,அது தான் நாட்டின் கடைசி ஜனநாயக தேர்தலாக இருக்கும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் சமூக நீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை காப்பற்ற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி ஆட்சி மாற்றத்திற்கு வர வேண்டும் என்றார்.

இதையும் படியுங்கள்

அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது! போற போக்கில் ஓபிஎஸ்-ஐ மறைமுகமாக தாக்கிய இபிஎஸ்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios