ஒருவருக்கொருவர் சுட்டுக் கொண்ட இந்தியர்கள்.. அமெரிக்காவில் நடந்த ‘பரபரப்பு’ சம்பவம் - ஏன்.?
அமெரிக்காவின் கலிபோர்னியா குருத்வாராவில் 2 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள குருத்வாரா ஒன்றில் இரண்டு பேர் சுட்டு கொண்ட சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் அமெரிக்காவில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ராட்ஷா சாலையின் 7600 பிளாக்கில் அமைந்துள்ள குருத்வாரா சேக்ரமெண்டோ சீக்கிய சங்கம் கோவிலில் நடந்துள்ளது. அப்போது தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?
அப்போது திடீரென ஏற்பட்ட சண்டையில் ஈடுபட்ட இரண்டாவது நபர் முதல் நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு ஓடிவிட்டார் என்றார் சாக்ரமெண்டோ கவுண்டி ஷெரிப் அலுவலக செய்தித் தொடர்பாளர் அமர் காந்தி. இந்த துப்பாக்கிச் சூடு ஒரு வெறுப்புக் குற்றத்துடன் தொடர்புடையது அல்ல என்றும், ஒருவருக்கொருவர் தெரிந்த இருவருக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூடு என்று விவரித்துள்ளார். சந்தேக நபர்களில் ஒருவர் இந்திய ஆண் என்றும், மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மருத்துவமனையில் இருப்பதாகவும் காந்தி கூறினார்.
காயமடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை என்றும், இருவரும் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தெற்கு சேக்ரமெண்டோவில் உள்ள கைசர் பெர்மனெண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கி சூடு குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
இதையும் படிங்க..அதானிக்கு 20,000 கோடி எங்கிருந்து வந்தது.? சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன் - பிரதமருக்கு ராகுல் கேள்வி