விடாமல் காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி.. ரூ.4 லட்சத்தை இழந்த இளைஞர் தற்கொலை.. திருச்சியில் மீண்டும் சோகம்..!
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை 2வது முறையாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
ஆன்லைன் ரம்மியால் சுமார் ரூ.4 லட்சம் வரை பணத்தை இழந்த கூலி தொழிலாளியான வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை தடுக்கும் நோக்கில் தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை 2வது முறையாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வில்சன் (26) என்பவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.4 லட்சம் வரை இழந்துள்ளார். கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடியதாகவும், கடனை அடைக்க முடியாமல் கடன் கழுத்தை நெரித்து வந்ததாக கூறப்படுகிறகிறது. இதனால், மனவேதனையில் இருந்து வந்த வில்சன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெதரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வில்சன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.