16 வயது மைனர் சிறுமி.. இளைஞனுடன் ஓட்டம் - கடைசியில் இப்படியா நடக்கும்.! தந்தை கதறல்
தகராறின் போது இளம்பெண் ஒருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜம்முவைச் சேர்ந்த 16 வயது சிறுமி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் ஜம்முவை சேர்ந்த 16 வயது சிறுமி இளைஞர் ஒருவருடன் ஓடிச்சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அவர் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றார் என்று கூறப்படுகிறது.
சிறுமியின் தந்தை தாலிப் அலி கூறுகையில், அவர் தனது குடும்பத்துடன் ஜம்முவில் எட்டு ஆண்டுகளாக வசித்து வருகிறார். குற்றம் சாட்டப்பட்ட ஆஷு நான்கு மாதங்களுக்கு முன்பு ஜம்முவுக்கு வந்தார். தன்னுடைய 16 வயது மகள் அவனுடன் ஓடிப்போனார்” என்று கூறினார். அதன்பிறகு, உ.பி.யின் ஹபூர் மாவட்டத்துக்கு வந்த ஆஷு, பீம்நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசிக்கத் தொடங்கினார்.
இதையும் படிங்க..அதானிக்கு 20,000 கோடி எங்கிருந்து வந்தது.? சிறையில் அடைத்தாலும் கேள்வி கேட்பேன் - பிரதமருக்கு ராகுல் கேள்வி
இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கடந்த மார்ச் 22ம் தேதி இளம்பெண்ணை ஆசு கழுத்தை நெரித்து கொன்றார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் முதலில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி காவல்துறையினரை குழப்ப முயன்றனர். இருப்பினும் கடைசியில் வசமாக சிக்கி கொண்டனர் மாப்பிள்ளை குடும்பத்தினர்.
எனினும், பிரேத பரிசோதனை அறிக்கையில், கழுத்து நெரிக்கப்பட்ட கொலையே காரணம் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சனிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக ஹாபூர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஆஷிஷ் குமார் தெரிவித்தார். இச்சம்பவம் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..உச்ச நீதிமன்றத்துக்கு போக முடியாது.. பதவியும் போச்சு.! என்ன செய்ய போகிறார் ராகுல் காந்தி.?
இதையும் படிங்க..Group 4 Cut off : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவு ரிலீஸ் - கட் ஆஃப் மார்க் எவ்வளவு தெரியுமா? முழு விபரம்