LGBTQ மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதர்களாக நடத்துங்கள் என திருநங்கையும், சமூக ஆர்வலருமான ஜெஸ்ஸி அரோரா கோரிக்கை வைத்துள்ளார். LGBTQ சமூகத்தினரை பாரிசாலன் என்பவர் சமூக வலைதளத்தில் மிகவும் இழிவாக பேசியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் படிக்க
- Home
- Tamil Nadu News
- TamilNews Highlights:அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன் முன்னாள்அமைச்சர்
TamilNews Highlights:அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு நானும் போட்டியிடுவேன் முன்னாள்அமைச்சர்

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தானும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் மனிதனா நடந்துக்கோ...யூ-டியூபர் பாரிசாலன் மீது திருநங்கை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.
திமுகவில் இணையும் முன்னாள் DGP ரவி IPS...??? அண்ணாமலைக்கு டப் கொடுக்க ஐடியா.?
தமிழக முன்னாள் ஓய்வு பெற்ற டிஜிபி ரவி IPS விரைவில் அதிமுகவில் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பொருத்திருந்து பார்க்கலாம் என சிரிப்பையே பதிலாக கூறியுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு அரசியலில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக பாஜகவில் இணைந்து தற்போது தமிழக பாஜகவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். பிரதமர் மோடியின் மீது ஏற்பட்ட ஈர்ப்பின் காரணமாக அரசியலுக்கு தான் வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க
இது தான் சார் இந்தியா ... பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனிதநேயத்தை போதித்த BSF.
இந்திய எல்லைப் பகுதிக்குள் வழிதவறி வந்த 3 வயது குழந்தையை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் (BSF)பத்திரமாக மீட்டு அந்த நாட்டிடம் ஒப்படைத்தது. இதற்கான புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தியா எப்போதும் மனிதநேயத்தின் அடையாளம் என பலரும் பாராட்டி வருகின்றனர். உலகிலேயே பதற்றம் நிறைந்த எல்லைக் கோடாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை கோடு உள்ளது. இருநாடுகளும் பிரிந்தது முதலே பகை நாடுகளாக இருந்து வருகின்றன. மேலும் படிக்க
காசுக்காக இந்து தெய்வங்களை தினம் தினம் அவமரியாதை செய்யும் திருமாவளவன் அயோக்கியன்.. அர்ஜூன் சம்பத் ஆவேசம்.
இந்து தெய்வங்களை அன்றாடம் ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிற திருமாவளவன் ஒரு அயோக்கியன் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். வெளிநாட்டினரிடம் காசு வாங்கிக்கொண்டு, இசுலாமியர்கள் போடுகிற எச்சில் பிரியாணிக்காக இந்து மதத்துக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார் என அவர் விமர்சித்துள்ளார். மேலும் படிக்க
விஜய்காந்த் உடல்நிலை.. இதெல்லாம் ஈனத்தனமான செயல்.. தேமுதிக வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..
கேப்டன் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம். அடுத்தவரின் உடல்நிலை குறித்து தவறான செய்தியை பரப்பி அதன்மூலம் ஆதாயம் தேடும் ஈனத்தனமான செயல்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று தேமுதிக கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க
Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொட்டு வந்த சிகரங்கள்!
Lady Super Star Nayanthara journey in Tamil Cinema- Quick-Rewind : தமிழக சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்து வந்த பாதை குறித்த சிறு தொகுப்பை இங்கு காணலாம்...
மேலும் செய்திகளுக்கு... Nayanthara Movies : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார தொட்டு வந்த சிகரங்கள்!
இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது.. கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பின்மை அச்சுறுத்தல்..முதலமைச்சர் கடிதம்
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 12 தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும் படிக்க
மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தை திருட்டு..! கட்டப்பையில் வைத்து கொண்டு சென்ற மர்ம பெண்..? தட்டி தூக்கிய போலீஸ்
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை சிசிடிவி காட்சி உதவியோடு போலீசார் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்துள்ளனர்.
நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு
2023 ஆம் ஆண்டு இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்த உள்ளது. அதில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது இது சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்தால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
துறைமுக கண்டெய்னர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்.. பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஆகும் அபாயம்..
சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் , வாடகையை உயர்த்தி தர வலியுறுத்தி தரக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
நேரம் காலம் இல்லாமல் கணவர் ஓயாத டார்ச்சர்... மாடியில் இருந்து குதித்து மனைவி தற்கொலை..
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கணவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !
அருண் விஜயிடம் படத்தில் மட்டும் உறவுகளை விட்டுக் கொடுக்கக் கூடாது என பேசி உள்ள தாங்கள் உங்கள் குடும்பத்திலும் ஒருவரை ஒதுக்கி வைத்துள்ளீர்களே அவர்களை சேர்த்துக் கொள்வீர்களா என கேட்டுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு... வனிதாவை சேர்த்து கொள்வீர்களா?..ஆடிப்போன அருண்விஜய் !
ராக்கெட்ரி படக்குழுவுக்கு ரஜினி வாழ்த்து
ராக்கெட்ரி படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்களை செய்து அரும்பாடுபட்ட பத்ம பூஷன் நம்பி நாராயணன் அவர்களின் வரலாற்றை மிகத் தத்ரூபமாக படமாக்கி, முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர் என நிரூபித்து இருக்கிறார் மாதவன். ராக்கெட்ரி அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு படம்” என பாராட்டி உள்ளார்.மேலும் படிக்க
அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தானும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் மட்டுமேதான் அதிமுகவா? என கேள்வி எழுப்பியவர், எம்.ஜி.ஆரின் உயில்படி தொண்டர்கள் மட்டுமே தலைவரை தேர்ந்தெடுக்க முடியும் என கூறினார். தேர்தல் நடத்தட்டும், நான் நிற்கிறேன் என்னை போல் 100 பேர் நிற்பார்கள் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர் தலைமை ஏற்கட்டும் என முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் கூறியுள்ளார்.
13 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்
தமிழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் படிக்க
ஒர்க் ஷாப் வேலைக்கு வந்த 22 வயது இளைஞரை மடக்கிய ஓனரின் மனைவி..
கள்ளக்காதலை கண்டித்த மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்தது போல நாடகமாடிய மனைவி உள்ளிட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வெற்றிவிழா நடத்தும் உதயநிதி!
உதயநிதி வெளியிட்ட படங்களில் எஃப்.ஐ.ஆர், பீஸ்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், டான், நெஞ்சுக்கு நீதி, விக்ரம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைத் தழுவின. இதன்காரணமாக இந்த படங்களின் வெற்றியை ஒரு விழாவாக நடத்தி கொண்டாட உதயநிதி ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.மேலும் படிக்க
தினம் படுக்கையறையில் செ* டார்ச்சர்... துணி மாற்றும் போது மறைந்திருந்து வீடியோ... சைகோ கணவனால் கதறிய மனைவி.
மனைவிக்கு தினந்தினம் பாலியல் டார்ச்சர் கொடுத்து வந்ததுடன், நிர்வாணமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் கணவன் மீது மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலிரவு தொடங்கி தற்போது வரை உடல்ரீதியாக கணவன் சித்திரவதை செய்து வந்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.மேலும் படிக்க
சென்னையில் அதிகரிக்கும் கொரோனா.. பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்.. மாநகராட்சி உத்தரவு..
சென்னையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதே போல் வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடையில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்
ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவுக்கு இடைக்கால தடை வேண்டுமெனில் தனி நீதிபதியை அணுகுமாறு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் படிக்க