Asianet News TamilAsianet News Tamil

துறைமுக கண்டெய்னர் லாரிகள் காலவரையற்ற ஸ்டிரைக்.. பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஆகும் அபாயம்..

சென்னை மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் , வாடகையை உயர்த்தி தர வலியுறுத்தி தரக்கோரி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

Port container trucks are on an indefinite strike.
Author
Tamilnádu, First Published Jul 4, 2022, 3:25 PM IST

வெளிநாடுகளிலிருந்து கப்பல்கள் மூலம் கொண்டு வரப்படும் சரக்குகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்லும் பணியில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் கண்டெய்னர் லாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாடகை உயர்த்தி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே இன்று முதல் வாடகையை உயர்த்தி தர வலியுறுத்தி கண்டெய்னர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க:13 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்

இந்த வேலைநிறுத்தத்தால் பல கோடி ரூபாய் சரக்குகள் தேக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சங்கத்தின் சார்பில் தெரிவிக்கையில், கடந்த 2014-ம் ஆண்டு டீசல் விலை 48 ரூபாயாக இருந்தது. ஆனால் தற்போது 110 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், இன்சூரன்ஸ், எப்.சி. மற்றும் உதிரி பாகங்களில் விலையும் கடுமையாக ஏற்றம் கண்டுள்ளது. ஆகையால் உடனடியாக எங்களுக்கு வாடகையை உயர்த்தி தர வேண்டும் என்று கூறி ஒப்பந்ததாரர்களின் கூட்டமைப்பு சார்பில் இயற்றப்பட்ட தீர்மானத்தின் படி இன்று முதல் கண்டெய்னர் லாரிகளை இயக்காமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது.. வானிலை அப்டேட்..

Follow Us:
Download App:
  • android
  • ios