Asianet News TamilAsianet News Tamil

13 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர் நியமனம்.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்

தமிழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
 

13 thousand vacancies for temporary teacher appointment can be applied from today
Author
Tamilnádu, First Published Jul 4, 2022, 2:32 PM IST

தற்காலிக ஆசிரியர் பணி நியமனம்:

தமிழகத்தில் காலியாக உள்ள தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 காலிப் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை அண்மையில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.

அதன்படி அரசுப்பள்ளிகளில் 4,989  இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும்  5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் 3,188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அந்தந்த பள்ளிகளுக்கு அருகே உள்ளவர்களை தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலம் நியமனத்துக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது. இந்த மேலாண்மை குழுவில் பள்ளி தலைமை ஆசிரியர், உதவி தலைமை ஆசிரியர், மூத்த பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆகியோர் இருப்பார். 

மேலும் படிக்க:இன்று 5 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த மாவட்டங்களில் அடித்து ஊற்றப்போகிறது.. வானிலை அப்டேட்..

தொகுப்பூதியம் அடிப்படையில் சம்பளம்:

இவர்களுக்கு தொகுப்பூதியம் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ரூ.7,500 யும்,  பட்டதாரி ஆசிரியர்களுக்கு  ரூ.10,000 யும், முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் 12,000 யும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை வரும் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரைக்குள் நிரப்ப வேண்டும் என்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும் நிரப்ப வேண்டும் என்று கூறப்பட்டது. இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கும், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கும் முன்னூரிமை வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து பணிக்காக காத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. அதன்படி காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் பள்ளி வாரியாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இன்று முதல் ஜூலை 6ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:இந்த உத்தரவு பொருந்தாது.. ஓபிஎஸ் தலையில் இடியை இறக்கிய சென்னை உயர்நீதிமன்றம்..!

இன்று முதல் விண்ணப்பம்:

சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் உரிய சான்றிதழ்களுடன் நேரடியாக விண்ணப்பிக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட அலுவலக மின்னஞ்சல் வாயிலாக சான்றிதழ்களை சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 6ம் தேதி (நாளை மறுநாள்) இரவு 8 மணிக்குள் கல்வி ஆணையருக்கு அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios