LGBTQ மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதர்களாக நடத்துங்கள் என திருநங்கையும், சமூக ஆர்வலருமான ஜெஸ்ஸி அரோரா கோரிக்கை வைத்துள்ளார். 

LGBTQ மக்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதர்களாக நடத்துங்கள் என திருநங்கையும், சமூக ஆர்வலருமான ஜெஸ்ஸி அரோரா கோரிக்கை வைத்துள்ளார். LGBTQ சமூகத்தினரை பாரிசாலன் என்பவர் சமூக வலைதளத்தில் மிகவும் இழிவாக பேசியுள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அவர் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 

சமூகத்தில் மிகவும் ஒடுக்கப்பட்டவர்களிலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் திருநங்கைகள். தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனப்படும் LGBTQ சமூகத்தினர் உள்ளனர். பிறரைப் போல உழைத்து வாழ வேண்டும் என்று அவர்கள் நினைத்தாலும் இந்த சமூகம் அவர்களை அவர்களின் குறைகளை சொல்லி சொல்லி காயப்படுத்தும் சமூகமாகவே இருந்து வருகிறது. படித்து திறமை மிக்கவர்களாக இருந்தாலும் பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு அங்கீகாரம் இல்லாத நிலையே உள்ளது. 

இதையும் படியுங்கள்: கிரிவலப்பாதையில் கருணாநிதி சிலையா? எ.வ வேலு காலேஜ்ல வைங்க பார்க்கலாம் - எச்.ராஜா கொந்தளிப்பு

தொழில், வேலைவாய்ப்பு போன்றவை முற்றிலும் அவர்களுக்கு மறுக்கப்படும் சூழலே உள்ளது. கௌரவமான ஒரு வாழ்க்கை வாழவே அவர்கள் போராடும் சூழ்நிலையில் படித்தவர்கள் சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ளவர்கள் கூட அவர்களை அவமதித்து பேசும் சூழ்நிலை தொடர்கிறது. இந்த வரிசையில் யூடியூப்பர் தமிழ் தேசியவாதி என தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் பாரிசாலன் என்பவர் LGBTQ பிரிவினர் நடத்திய சுயமரியாதை பேரணியை மிக கொச்சையாக விமர்சித்துள்ளார். இது திருநங்கைகள் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எனப்படும் LGBTQ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: திமுகவில் இணைகிறாரா முன்னாள் DGP ரவி IPS...??? அண்ணாமலைக்கு டப் கொடுக்க திட்டமா.?

இந்நிலையில் பாரிசாலன் மீது சென்னை அய்யப்பன்தாங்கல் சேர்ந்த சமூக ஆர்வலருமான திருநங்கையுமான ஜெஸ்ஸி அரோரா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:- கடந்த வாரம் LGBTQமக்கள் சுயமரியாதை பேரணி ஒன்றை நடத்தினர். பேரணியை திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார். இந்நிலையில் அந்தப் பேரணியை தவறாக புரிந்துகொண்ட யூடியூபர் பாரிசாலன் என்பவர் செங்கோல் யூடியூப் சேனலில்LGBTQ மக்களை மிகவும் கொச்சையாக, இழிவுபடுத்தும் வகையிலும் பேசியுள்ளார்.

எல்ஜிபிடி மக்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்கள், சமுதாயத்துடன் சேர்ந்து வாழ முடியாதவர்கள் என்றும் அவர்களின் தனி மனித உரிமையைப் பறிக்கும் வகையில் பாரிசாலன் பேசியுள்ளார். அரசு தங்களுக்கு பல உரிமைகள் வழங்கியிருப்பதை சலுகைகள் என கொச்சைப்படுத்தி அவர் பேசியுள்ளார். LGBTQ மக்களை அவதூறாக பேசிய யூடியூபர் பாரிசாலன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

எங்களைப்போன்ற மக்களுக்கு உதவி புரியவில்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களை சக மனிதர்களாக பார்க்க வேண்டும், அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுங்கள் என்றுதான் கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.