இது தான் சார் இந்தியா ... பாகிஸ்தான் ராணுவத்திற்கு மனிதநேயத்தை போதித்த BSF.

இந்திய எல்லைப் பகுதிக்குள் வழிதவறி வந்த 3 வயது குழந்தையை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் (BSF)பத்திரமாக மீட்டு அந்த நாட்டிடம் ஒப்படைத்தது. இதற்கான புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தியா எப்போதும் மனிதநேயத்தின் அடையாளம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


 

 This is India sir ... BSF taught humanity to Pakistan Army.

இந்திய எல்லைப் பகுதிக்குள் வழிதவறி வந்த 3 வயது குழந்தையை இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் (BSF)பத்திரமாக மீட்டு அந்த நாட்டிடம் ஒப்படைத்தது. இதற்கான புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் இந்தியா எப்போதும் மனிதநேயத்தின் அடையாளம் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

உலகிலேயே பதற்றம் நிறைந்த எல்லைக் கோடாக இந்தியா-பாகிஸ்தான் எல்லை கோடு உள்ளது. இருநாடுகளும் பிரிந்தது முதலே பகை நாடுகளாக இருந்து வருகின்றன. அதேநேரத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத இயக்கங்கள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசகார செயல்களை செய்ய சதி திட்டம் திட்டி வருகின்றன. ஆனால் அதை இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், ராணுவ வீரர்கள் கண் கொத்தி பாம்பாக இருந்து முறியடித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்: "எச்சில் பிரியாணிக்காக இந்து தெய்வங்களை பேசுறியே.. அறிவில்ல.. திருமாவை தரம் தாழ்ந்து விமர்சித்த அர்ஜூன் சம்பத்

 This is India sir ... BSF taught humanity to Pakistan Army.

எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் என்னதான் ஆக்ரோஷமானவர்களாக இருந்தாலும் பல நேரங்களில் எதிரிகளிடமும் மனிதநேயத்தை காட்டும் வீரர்களாக இந்திய வீரர்கள் இருந்து வருகின்றனர். பாகிஸ்தானைச் சேர்ந்த 3 வயது குழந்தை இந்திய எல்லைக்குள் வழி தெரியாமல் நுழைந்துள்ள நிலையில் அந்த குழந்தையை பத்திரமாக மீட்டு அவரது பெற்றோர்களிடம் இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் ஒப்படைத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு

இந்திய எல்லைக் கோடு என்பது மிகவும் பாதுகாப்பு நிறைந்ததாக இருக்கும், அத்து மீறி யாராவது உள்ளே நுழைந்தால் அவர்கள் சுட்டு வீழ்த்தவும் பாதுகாப்பு படைக்கு அதிகாரம் உள்ளது. இச்சூழ்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 7:15 மணி அளவில் இந்திய பாகிஸ்தான் எல்லை பெரோஸ்பூர் செக்டார் பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் குழந்தை ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டது, இந்த தகவல் பாதுகாப்பு படையில் முகாமுக்கு தெரிவிக்கப்பட்டது, உடனே அங்கு வந்த வீரர்கள் குழந்தையை பத்திரமாக மீட்டு சென்றனர்.

மேலும் அக்குழந்தையின் விவரங்களை எதுவும் வெளியிடவில்லை, பின்னர் குழந்தை எங்கிருந்து வந்தது என்பது குறித்து பிஎஸ்எப் அதிகாரிகள் விசாரணைக்கு உத்தர விட்டனர். குழந்தை குறித்து விசாரிக்கப்பட்டது, இதனை அடுத்து பிஎஸ்எப் பாகிஸ்தான் ரேஞ்சர்களை தொடர்புகொண்டது, அப்போது கவன்குறைவாக குழந்தை எல்லை தாண்டியது என்றும், அது தற்செயலான சம்பவம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இரவு 9 : 45 மணி அளவில் நல்லெண்ணம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் குழந்தையை பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் வசம் பிஎஸ்எப் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

 This is India sir ... BSF taught humanity to Pakistan Army.

அப்போது பாகிஸ்தான் சார்பில் இந்திய வீரர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது, இதற்கான புகைப்படத்தை இந்திய பாதுகாப்புத்துறை வெளியிட்டது, இதுபோன்ற பாராட்ட தக்க செயல்களை நாட்டு வீரர்கள் செய்வது இது முதல் முறை அல்ல, எல்லைதாண்டி வருபவர்களுக்கு BSF எப்போதும் மனிதநேயத்திட் அடிப்படையில் உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்திய எல்லையில் மனிதநேயமற்ற முறையில் கண்மூடித்தனமாக ஆங்காங்கே பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி வரும் நிலையில் இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் 3 வயது குழந்தையை பத்திரமாக மீட்டு மீண்டும் அந்நாட்டிடம் ஒப்படைத்திருப்பது இந்தியாவில் மனிதநேயத்தை காட்டுகிறது. குறிப்பாக பாகிஸ்தானுக்கு இதுதான் இந்தியாவின் மனித நேயம் என வலியுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios