நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு
2023 ஆம் ஆண்டு இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்த உள்ளது. அதில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது இது சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு இந்தியா ஜி20 உச்சி மாநாட்டை தலைமையேற்று நடத்த உள்ளது. அதில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் சில கூட்டங்களை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது இது சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஜம்மு மற்றும் காஷ்மீர் நிர்வாகத்தால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்பு ஜி-20...
அடுத்தாண்டு ஜி 20 மாநாடு இந்தியா நடத்தவுள்ளது. அதில் சில கூட்டங்கள் காஷ்மீர் மற்றும் ஜம்முவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்தியாவுக்கு தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை எடுத்து நிலைமையை சிக்கலாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் ஜி-20 உச்சிமாநாடு நடத்துவதற்கு சீனா மற்றும் பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் இந்தக் குழுவில் உள்ள அனைத்து நாடுகளும் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பாஜகவா... ? வாய்ப்பு இல்லை ராஜா.. அமித்ஷாவையே ஆடவிட்ட வைகை செல்வன்
ஜி 20 இல் உள்ள நாடுகள்...
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், துருக்கி, தென்னாப்பிரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த ஜி-20 நாடுகளின் குழுவில் இடம்பெற்றுள்ள முக்கிய நாடுகள் ஆகும், ஆனால் இந்த அமைப்பில் பாகிஸ்தான் இல்லை, இதனால் இந்தியாவின் இந்த ஏற்பாட்டை புறக்கணிக்குமாறு பிற நாடுகளுக்கு அந்நாடு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரத்தில் ஜம்மு-காஷ்மீரில் ஜி20 நாடுகளின் கூட்டம் நடந்தால் அது இந்தியாவுக்கு ஐந்து பெரிய சாதகங்களை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுனர்கள் கணிக்கின்றனர்.
இதையும் படியுங்கள்: சுதந்திரப் போராட்ட வீரரின் மகளில் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி.. யார் அந்த சுதந்திர போராட்ட வீரர் ?
முதலாவதாக 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு காஷ்மீரின் நிலைமை சாதாரணமாகிவிட்டது என்பதை இந்த மாநாடு சர்வதேச அளவில் இது பறைசாற்றும் வகையில் அமையும், இரண்டாவதாக ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை இது சர்வதேச அளவில் நிரூபிப்பதற்கான ஒரு நல்ல வாய்ப்பாக அமையும், அதேநேரத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் செய்துவரும் தவறான பிரச்சாரத்தை இதன் மூலம் அம்பலப்படுத்த முடியும்.
மூன்றாவதாக ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் உள்விவகாரம் என்பதை இதன் மூலம் இந்தியா உறுதி செய்ய முடியும். 4வதாக ஜி20 மாநாட்டை முதல்முறையாக இந்தியா நடத்தஉள்ளது, இவ்வளவு பெரிய உச்சி மாநாட்டை நடத்தும் அளவிற்கு இந்தியாவிற்கு திறன் உள்ளது என்பதை சர்வதேச அரங்கிற்கு அதன் மூலம் எடுத்துக் காட்ட முடியும், 5வதாக சர்வதேச வரைபடத்தில் ஜம்மு காஷ்மீருக்கு ஒரு புதிய அடையாளத்தை இதன் மூலம் பெறமுடியும், அங்கு பொருளாதார வளர்ச்சியை இதன் மூலம் ஏற்படுத்த முடியும்.
மேலும் அதிகளவிலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஜம்மு-காஷ்மீருக்கு ஈர்க்கவும் மேலும் அங்கு பல சுற்றுலாத் துறையை இதன் மூலத் மேம்படுத்த முடியும் என இந்தியா திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக பாகிஸ்தான் செய்துவரும் முன்மைக்குப் புறம்பான பிரச்சாரத்தை அம்பலப்படுத்த முடியும், இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இதைவிட சிறந்த உத்தி எதுவும் இருக்க முடியாது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.