சுதந்திரப் போராட்ட வீரரின் மகளில் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி.. யார் அந்த சுதந்திர போராட்ட வீரர் ?
ஆந்திராவின் சுதந்திரப் போராட்ட வீரரின் 90 வயது மகளின் பாதங்களைத் தொட்டு பிரதமர் மோடி ஆசிர்வாதம் வாங்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திர மாநிலம் பீமாவரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் ஆந்திராவின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசாலா கிருஷ்ண மூர்த்தியின் மகள் 90 வயதான பசல கிருஷ்ண பாரதியின் முன் வணங்கி ஆசி பெற்றார். பிரதமர் நரேந்திர மோடியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சுதந்திர போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜுவின் 125வது பிறந்தநாள் விழாவை ஆந்திர மாநிலம், பீமாவரத்தில் மோடி இன்று தொடங்கி வைத்தார். இந்த விழா ஆண்டு முழுவதும் நடைபெறும். நிகழ்ச்சியில் தனது உரையை முடித்த பிரதமர் மோடி, பிரதமர் மோடி தனக்குரிய பாதுகாப்பினை மீறி, ஆந்திராவின் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசாலா கிருஷ்ண மூர்த்தியின் மகள் 90 வயதான பசல கிருஷ்ண பாரதியின் முன் வணங்கி ஆசி பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
யார் இந்த பசாலா கிருஷ்ண மூர்த்தி ?
பசாலா கிருஷ்ணமூர்த்தி (1900-78) ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டம், தாடேபள்ளிகுடம் தாலுகாவில் உள்ள பஸ்சிம் விபாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவர் ஜனவரி 26, 1900 இல் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஆதியா மற்றும் தாயின் பெயர் சீதம்மா ஆகும். அஞ்சலக்ஷ்மி என்பவரை திருமணம் செய்தார்.
1921 மார்ச் மாதம் மகாத்மா காந்தி விஜயவாடா சென்றபோது, கிருஷ்ணமூர்த்தி மற்றும் அஞ்சலக்ஷ்மி காங்கிரஸில் இணைந்தனர். 1929 ஆம் ஆண்டு காந்திஜி 1929 ஆம் ஆண்டு சாகல்லுவில் உள்ள ஆனந்த நிகேதன் ஆசிரமத்தை அடைந்தபோது, கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர் கதர் நிதிக்கு தங்கத்தை வழங்கினர். அப்போது கிருஷ்ண பாரதி பிறந்தார். உப்பு சத்தியாக்கிரக இயக்கத்தில் பசல் தம்பதியினர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
பசாலா கிருஷ்ண மூர்த்தி
அக்டோபர் 6, 1930 இல், அவர் ராஜமுந்திரி மற்றும் வேலூர் சிறைகளில் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் விளைவாக 1931 மார்ச் 13 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். தாடேபள்ளிகுடம் சந்தையில் சட்ட மறுப்பு இயக்கத்தின் போது, வெளிநாட்டு துணிக்கடையில் பசல் மறியல் செய்து 1932 ஜூன் 26 அன்று பீமாவரம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றினார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு 1932 ஜூன் 27 அன்று ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். 400 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
காதியின் பரவல் மற்றும் ஹரிஜனங்களின் மேம்பாட்டிற்கான அதன் போராட்டத்திற்காகவும் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார். கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது மனைவி அஞ்சலக்ஷ்மி மேற்கு வைப்பாறு பகுதியில் மருத்துவமனை ஒன்றைக் கட்டினர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, தாடேப்பள்ளிகுடம் தாலுகா சுதந்திரப் போராளிகள் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார்.
இந்திய அரசின் சுதந்திரப் போராட்ட வீரர்களின் ஓய்வூதியத்தை அவர் நிராகரித்திருந்தார். ஹரிஜனங்களுக்கு வீடு கட்டுவதற்காக பஸ்சிம் விபருவில் இரண்டு ஏக்கர் நிலத்தை வழங்கினார். அவரது பங்களிப்பை நினைவுகூரும் வகையில், தாடேபள்ளிகுடம் நகராட்சி பசலா கிருஷ்ணமூர்த்தி நினைவு தொடக்கப் பள்ளியை நிறுவியது. அவர் 20 செப்டம்பர் 1978 இல் இவ்வுலகை விட்டு மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்