செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
இந்தியாவில் விரைவில் குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு, மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார்கள்.
குடியரசு தலைவர் தேர்தல்
இந்த தேர்தலுக்காக இருவரும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று ஆதரவு கோரி வருகின்றனர். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் திரௌபதி முர்மு நேற்று தமிழகத்தில் ஆதரவு சேகரிப்பில் ஈடுபட்டார். சென்னை நுங்கம்பாக்கம் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு கோரினார்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
அதிமுக
மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், முரளிதரன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் பழனிசாமி, அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள், புதிய பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரண்டாவது அமர்வில், பாமக தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
தேமுதிக மற்றும் தமாகா
மூன்றாவது அமர்வில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், 4-வது அமர்வில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய நீதி கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !
பிரேமலதா, சுதீஷ் - அனுமதி
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதாவுக்கும், துணைச் செயலாளர் எல்.கே.சுதீஸுக்கும் குடியரசு தேர்தலில் ஒட்டு போட சிறப்பு அனுமதியை தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பிரேமலதா கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?