ஓபிஎஸ் செய்த தவறு இதுதான்..உண்மையை போட்டு உடைத்த எடப்பாடியார் - என்ன சொன்னார் தெரியுமா?
மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
ஒற்றை தலைமை விவகாரம்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், மத்திய இணைஅமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் ஈபிஎஸ் அமர்ந்த நிலையில், ஓபிஎஸ் மேடைக்கு வரவில்லை.
மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!
நிகழ்ச்சி நடைபெறும் ஓட்டலில் தனி அறையில் ஓபிஎஸ் இருந்துவிட்டார். மேடையில் இபிஎஸ், எல்.முருகன், அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். ஓ.பன்னீர்செல்வம், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் காத்திருந்தார். மேடையிலிருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துவிட்டு புறப்பட்டுச் சென்றதும், மேடைக்குச் சென்று தனது ஆதரவை தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உரையாற்றினார்.
ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். ஓபிஎஸ் அளித்த பேட்டியில், ‘கட்சி சட்டவிதிகளின் படி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் தொடர்கிறேன். குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முக்கு ஆதரவை தெரிவித்திருக்கிறோம்.முர்முவை அதிமுக சார்பில் சந்தித்து இதய பூர்வ ஆதரவை தெரிவித்தேன். அதிமுகவில் தற்போது வரை நான்தான் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறேன்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி பேசிய போது, ‘பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் குடியரசு தலைவராக வருவது பெருமைக்குரியது. அதிமுகவைப் பொருத்தவரை பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம். பொதுக்குழு எடுத்த முடிவுக்கு ஓ.பன்னீர்செல்வம் கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வத்தின் இன்றைய நிலைக்கு அவர்தான் காரணம். நாங்கள் இல்லை. பொதுக்குழுவுக்கு ஓ.பி.எஸ் கட்டுப்பட்டிருந்தால், இன்று திரௌபதி முர்முவை தனியாக சந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்காது’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !