Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!
Online Fraud : வெளிநாட்டு பரிசு, ஆதார் கார்டு பேன் கார்டு லிங்க் செய்வது, இன்பச் சுற்றுலா எனப் பல பரிமாணங்களில் அவர்கள் ஏமாற்று வேலையைத் தொடர்கிறார்கள்.
ஆன்லைன் மோசடி
காலத்திற்கேற்ப டெக்னலாஜி வளர வளர, அதற்கேற்றவாறு மோசடிகளும் அதிகரித்து வருகிறது. வங்கிக் கணக்கு காலாவதியாகி விட்டது என வங்கித் தகவல்களைக் கேட்டு மோசடி செய்யும் கும்பல்கள் பெருகிவருகின்றன. வெளிநாட்டு பரிசு, ஆதார் கார்டு பேன் கார்டு லிங்க் செய்வது, இன்பச் சுற்றுலா எனப் பல பரிமாணங்களில் அவர்கள் ஏமாற்று வேலையைத் தொடர்கிறார்கள்.
கோவையில் சம்பவம்
கோவை கவுண்டம்பாளையம் ஜி.என்.மில்லை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு வயது 83. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், இன்று இரவுக்குள் நீங்கள் மின் கட்டணத்தை செலுத்த வேண்டும், இல்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்றும், மேலும் மின் கட்டணத்தை செலுத்த கீழ்க்கண்ட லிங்கை கிளிக் செய்யவும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் செய்திகளுக்கு.. 750 கோடி முறைகேடு.. சிக்குவாரா செல்லூர் ராஜூ ?அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்
வாட்சப் லிங்க்
இதனால் பதற்றம் அடைந்த நடராஜன், உடனடியாக அந்த லிங்கை கிளிக் செய்து, தனது வங்கி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்தார். பின்னர் அதில் குறிப்பிடப்பட்டு இருந்த கணக்கிற்கு ரூ.10 செலுத்தினார். ஆனால் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 7 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இது பின்னர் தான் தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்
யாரும் நம்பாதீங்க
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், 'சைபர் க்ரைம் மோசடிப் பேர்வழியினர், பொதுமக்களை ஏமாற்றுவதற்காக புதிய யுக்திகளைக் கையாண்டு வருகிறார்கள். செல்போன் எண்ணுக்கு வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும் என்றும், சென்ற மாதம் மின் கட்டணம் அப்டேட் செய்யப்படவில்லை என்றும் உடனே மின்வாரிய அதிகாரியைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது வாட்ஸ்அப் எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள் என செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கின்றனர்.
மக்களே உஷார்
பதற்றத்தில் இருக்கும் அவர்களிடம் வங்கிக் கணக்கு விவரங்களை பெற்று நூதன முறையில் கொள்ளையடிக்கிறார்கள். எனவே பொதுமக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் போலி குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அவர்கள் அனுப்பும் எண்ணிற்கும் தொடர்பு கொள்ள வேண்டாம். மின்வாரியத்திலிருந்து இதுபோன்ற குறுந்தகவல்களோ, மொபைல் அழைப்புகளோ வராது. எனவே பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்’ என்று கூறினார்.
மேலும் செய்திகளுக்கு.. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை