ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை

ஆன்மீகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால், தமிழகத்தில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். 

Puducherry governor tamilisai soundarrajan indirectly attacked tn cm mk stalin

கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன்

வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது. இதில் புதுச்சேரி மற்றும் தெலங்கனா கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு அதிகாரம் பலம் அனைத்தும் இருக்கும். 

அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஆண்டாள் கற்றுக்கொடுத்த தமிழைதான் இன்று அனைவரது நாவிலும் தவிழ்ந்துக் கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மீகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழகம். ஆனால், தமிழகத்தில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். கொரனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை.  

மேலும் செய்திகளுக்கு.. மக்கள் உங்களுடன் நிற்பார்கள், கவலைப்படாதீங்க - நடிகர் பிரகாஷ்ராஜ் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு !

Puducherry governor tamilisai soundarrajan indirectly attacked tn cm mk stalin

ஆன்மிகமும், காவியும்

திறந்த வழிபாட்டோடு தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம். அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது. நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும் சொல்கிறது. 

மேலும் செய்திகளுக்கு.. 750 கோடி முறைகேடு.. சிக்குவாரா செல்லூர் ராஜூ ?அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்ன அதிர்ச்சி தகவல்

இந்து மதம்

மெய்ஞானமும் சொல்கிறது. விஞ்ஞானமும் அதை தான் சொல்கிறது. நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்றால் அதுதான் சுதந்திரம் என்றால் அது சுதந்திரம் இல்லை. அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை தான் அனைத்து மதமும் சொல்லிக் கொடுக்கிறது. இந்து மதமும் அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதிற்காக சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Puducherry governor tamilisai soundarrajan indirectly attacked tn cm mk stalin

முதல்வர் ஸ்டாலின்

அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை தான் நாமெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மரியாதையாக இருந்து கொண்டிருக்கிறது. எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார். மத நல்லிணக்கம் என பேசுகிறார். அவர், ' கிறித்துமஸ்க் கு வாழ்த்து சொல்லுவார். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லுவார். ஆனால் தீபாளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார். அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்லமாட்டார். ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை’ என்று முதல்வர் ஸ்டாலினை சீண்டிருக்கிறார் கவர்னர் தமிழிசை.

மேலும் செய்திகளுக்கு.. AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios