சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான ரூ.234 கோடி முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி !
சென்னை சரவணா ஸ்டோர்ஸ் கோல்டு பேலஸ்க்கு சொந்தமான ரூ. 234 கோடி சொத்துககளை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது.
சரவணா ஸ்டோர்ஸ்
1969-ம் ஆண்டு சாதாரண பாத்திர கடையாக தொடங்கப்பட்ட சரவணா ஸ்டோர் இந்து தமிழகத்தில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இந்த குழுமத்தினர் சரவணா செல்வரத்தினம், சூப்பர் சரவணா ஸ்டோர் என தனித்தனியாக பிரிந்து தொழில் செய்து வருகின்றனர்.
சென்னையில், தியாகராயநகர், போரூர், பாடி, புரசைவாக்கம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பகுதிகளில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான நகைக்கடை, துணிக்கடை, ஜவுளிக்கடை, வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டும் சூப்பர் மார்க்கெட் உள்ளிட்டவைகள் இயங்கி வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு.. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை
வருமான வரித்துறை சோதனை
சூப்பர் சரவணா ஸ்டோர் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 37 இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் நான்கு நாட்களுக்கு இரண்டு அணிகளாக பிரிந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சரவணா ஸ்டோர் தொடர்பான இடங்களில் கடந்த 7 ஆண்டுகளாக விற்பனை செய்த கணக்கில் 1,000 கோடி ரூபாயை மறைத்து ஆவணம் செய்தது தெரிய வந்தது.
மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!
234 கோடி முடக்கம்
இந்த நிலையில், இந்தியன் வங்கியில் கடன் பெற்று பணமோசடியில் ஈடுபட்டதான புகாரில் சென்னை சரவணா ஸ்டோர்ஸ் (கோல்ட் பேலஸ்) நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.234.75 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. மேலும், தமிழகத்தின் லாட்டரி அதிபர் மார்டினின் ரூபாய் 173 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளை முடக்கியது. மேலும், மார்டின் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் நிலம் மற்றும் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!