அதிமுக பொதுக்குழு கூட்டத்தை முதல்வர் தடுக்க வேண்டும்.. அதிமுகவில் எழுந்த புது சர்ச்சை!
அதிமுகவில் ஒற்றை தலைமை என்பது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தலைமை பதவியை கைப்பற்ற போவது யார் ? என்ற போட்டியில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக - ஒற்றை தலைமை
தமிழகம் முழுவதும் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் போஸ்டர் யுத்தம் நடத்தி வருகின்றனர். சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையிலேயே புதுவிதமான போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களால் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. AIADMK: ஓபிஎஸ் கொள்ளையடித்த பணம் புதுச்சேரியில் இருக்கு.. அதிமுக பிரமுகர் சொன்ன அதிர்ச்சி தகவல்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குறிப்பிட்ட சமுதாய அமைப்புகளும், அதிமுக தொண்டர்களும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் முக்குலத்தோர் உறவின்முறை சங்கம் சார்பில் ஓ. பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் தமிழகத்தில் 3 முறை முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், அவரை அவமானப்படுத்தி, சபை நாகரீகம் தெரியாத நன்றி மந்த எடப்பாடி. பழனிச்சாமி, எஸ். பி. வேலுமணி, சி.வி சண்முகம், ஜெயக்குமார், கே.பி முனுசாமி தொடர்ந்து வன்முறை தூண்டுதலுடன் பேசி ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓபிஎஸ்சை பொதுக்குழு கூட்டத்தில் தண்ணீர் பாட்டிலை எறிந்தும், வாகனத்தை சேதப்படுத்திய ரவுடி கும்பலை வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் செய்திகளுக்கு.. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்வார்.. தீபாவளிக்கு சொல்லமாட்டார்! முதல்வரை சீண்டிய தமிழிசை
எடப்பாடி பழனிசாமி
அவர்கள் மீது சட்ட பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வரும் ஜூலை 11ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்குழ கூட்டத்தில் வன்முறையை தூண்டி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட தி்ட்டமிட்டிருப்பதாலும் கொரோனா பரவும் அபாயகரமான காலகட்டத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதை தமிழக முதல்வரும், காவல்துறை தலைவரும் தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. Online Fraud : மின் கட்டணம் செலுத்துங்க..வைரல் வாட்சப் லிங்க் -மக்களே உஷார்.!