சென்னையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் வேண்டும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் மாநகராட்சி எச்சரித்துள்ளது. அதே போல்   வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், திரையரங்குகள், துணிக்கடையில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 

இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில்,” கொரோனா வைரஸ்‌ தொற்றிலிருந்து பொதுமக்கள்‌ தங்களைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌ என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில்‌ கேட்டுக்‌ கொள்ளப்படுகிறது.பெருநகர சென்னை மாநகராட்‌ சிக்குட்பட்ட பகுதிகளில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்றைக்‌ கட்டுப்படுத்த மாநகராட்சியின்‌ சார்பில்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின்‌ சார்பில்‌ தடுப்பூசி முகாம்கள்‌ மற்றும்‌ தீவிர கோவிட்‌ தடுப்பூசி சிறப்பு முகாம்கள்‌ நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு அதிகளவில்‌ கோவிட்‌ தடுப்பூசிகள்‌ செலுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க:முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..! அதிமுகவினர் அதிர்ச்சி

கடந்த 2 வாரங்களாக சென்னையில்‌ கொரோனா வைரஸ்‌ தொற்று அதிக அளவில்‌ பரவி வருகிறது. எனவே, பொதுமக்கள்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌. சூறிப்பாக வணிக வளாகங்கள்‌ போன்ற பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ முகக்கவசம்‌ அணிந்து சமூக இடைவெளியை தவறாமல்‌ பின்பற்ற வேண்டும்‌. பொதுசுகாதாரத்துறையின்‌ அறிவுறுத்தலின்படி, முகக்கவசம்‌ அணிவது குறித்து பொதுமக்களிடையே மாநகராட்சியின்‌ சார்பில்‌ விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே. வணிக நிறுவனங்கள்‌ தங்களுடைய அங்காடிகளில்‌ ஒரே நேரத்தில்‌ பொதுமக்கள்‌ அதிகம்‌ கூடுவதைத்‌ தவிர்த்து, சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும்‌. வணிக வளாகங்கள்‌, திரையரங்கங்கள்‌,
துணிக்‌ கடைகள்‌ போன்ற வணிக நிறுவனங்களின்‌ ஊழியர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ முகக்கவசம்‌ அணிவதை அந்தந்த நிறுவனமே உறுதிப்படுத்த வேண்டும்‌.

மேலும் படிக்க:முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர்..!60 நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தால் 1.25லட்சம் கோடி முதலீடு

மேலும்‌, ஒவ்வொரு தனிநபரும்‌ கோவிட்‌ தொற்றிலிருந்து தங்களைப்‌ பாதுகாத்துக்‌ கொள்ள வெளியில்‌ செல்லும்‌ பொழுது தவறாமல்‌ முகக்கவசம்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌. கோவிட்‌ தொற்றிலிருந்து பாதுகாத்துக்‌ கொள்ள மாநகராட்‌ சியின்‌
நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்‌ ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்‌ கொள்ளப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.