முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை குண்டு கட்டாக கைது செய்த போலீஸ்..! அதிமுகவினர் அதிர்ச்சி
மதுரை கப்பலூர் டோல்கேட்டை அகற்றக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், குண்டு கட்டாக போலீசார் கைது செய்தனர்.
ஆர்.பி.உதயகுமார் திடீர் உண்ணாவிரதம்
மதுரை மாவட்டம் கப்பலூர் டோல் கேட்டில் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனைகள் இருந்து வருகிறது. திருமங்கலத்தில் இருந்து மதுரை நகருக்கு செல்லும் உள்ளூர் வாகனங்களுக்கு திருமங்கலத்தில் குடியிருக்கும் நபர்களின் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை தவிர்க்க வேண்டும் என கோரி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருந்த போதும் இதற்க்கு உரிய முறையில் தீர்வு கிடைக்காமல் இருந்துள்ளது. இந்தநிலையில் நெடுஞ்சாலையில் ஒரு டோல்கேட்டிற்கும் அடுத்த டோல்கேட்டிற்கும் அரசு நிர்ணயித்துள்ள தூரத்திற்கு குறைவாகவே தூரம் உள்ளதால் கப்பலூர் டோல்கேட் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று காலை திடீரென டோல்கேட் அருகே உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இதை அறிந்த காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.
துரோகி எடப்பாடி, பச்சோந்தி ஆர்.வி உதயகுமார்..ஜெயக்குமாரை டாராக கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !
குண்டு கட்டாக கைது செய்த போலீசார்
அப்போது காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் பாதிக்க கூடிய வகையில் உள்ள டோல்கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என உதயகுமார் வலியுறுத்தினார். அதுவரை தனது போராட்டத்தை நிறைவு செய்ய மாட்டேன் என கூறினார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நேரம் செல்ல, செல்ல கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இதனையடுத்து போராட்டதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ உட்பட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது வேனில் ஏற்றினர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் பாஜகவா... ? வாய்ப்பு இல்லை ராஜா.. அமித்ஷாவையே ஆடவிட்ட வைகை செல்வன்