துரோகி எடப்பாடி, பச்சோந்தி ஆர்.வி உதயகுமார்..ஜெயக்குமாரை டாராக கிழித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் !
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
அதிமுக விவகாரம்
கடந்த 23ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. குழப்பம், கூச்சல், பரபரப்பு என்று நிறைவடைந்த அந்தக் கூட்டத்தில், கட்சியின் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. இதன் மூலம் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் காலாவதியாகிவிட்டதாகவும் இபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் கூறினர்.
அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பும் பணிகளும், பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு.. செம ட்விஸ்ட்.! திரெளபதிக்கு ஓட்டு போடும் பிரேமலதா & சுதீஷ்.. எந்த பதவியிலும் இல்லையே எப்படி?
எடப்பாடி Vs பன்னீர்செல்வம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்தக் கடிதத்தில் தலைமை நிலைய செயலாளர் என்று எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார். இந்தப் பொதுக்குழுவில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அழைப்பு அனுப்ப ஈபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க உள்ளனர். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மாறி மாறி போஸ்டர்களை கிழித்தும், ஒட்டியும் வருகின்றனர். மதுரை திருமங்கலம் தொகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர் எடப்பாடி தரப்பினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. மேயர் முதல் வார்டு உறுப்பினர்கள் வரை.. ஒழுங்கா இருக்கணும் - வார்னிங் கொடுத்த மு.க ஸ்டாலின் !
பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
‘பர்மா அகதியே பச்சோந்தி ஆர்.பி உதயகுமார், திருமங்கலம் தொகுதியில் என்ன வேலை கட்சியை விட்டு ஓடு எனவும், வேலை கேட்டு வந்த அவலப் பெண்ணுக்கு பிள்ளையை கொடுத்த புறம்போக்கு ஜெயக்குமாரே கட்சியை விட்டு ஓடு எனவும், காலில் விழுந்து ஆட்சி பிடித்து காலை வாரிய துரோகி பழனிசாமியே, கொடநாடு கொலை வழக்கு குற்றவாளிக்கு கட்சியை கொள்ளை அடிக்க பதவியா ?
துரோகத்தை நிறுத்திக் கொள் என எடப்பாடி பழனிசாமிக் கண்டித்தும், அம்மாவிடத்தில் அரியணை சிம்மாசனத்தை அப்படியே திருப்பி கொடுத்த பண்பாளர் ஓபிஎஸ் - க்கு தொண்டர்கள் ஆதரவு’ என்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு.. அதிமுகவிடம் கோடி கணக்கில் பணம் இருக்கு.. கொள்கை தான் இல்லை - அதிமுகவை கலாய்த்த சீமான்